பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இத்தகைய எண்ணத்தை மக்கள் மனத்திலே உண்டாக்கப் பாடுபடவேண்டும்.

பழைய தடத்திலேயே இலக்கியக் கர்த்தாக்கள் வழி நடக்கக்கூடாது. பொய்யைப் பொய் என்று சொன்னாலும் பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் இலக்கிய கர்த்தாக்கள் அதைப் பொய்யென்று துணிந்து சொல்லத்தான் வேண்டும்.

நாய் நன்றியுள்ளது என்கிறார்களே, அது எப்படி உண்மையாக இருக்க முடியும் நாய் நன்றியுள்ள பிராணியாக இருந்தால் அது தன் இனத்தினிடம் அல்லவா நன்றியாக இருக்கவேண்டும். அப்படி இருக்கிறதா? ஒரு முதலாளி அவன் தன்னிடம் வேலை பார்த்த மனிதனைப் பார்த்து, அவனைவிடத் தனது நாய் நன்றியுள்ளது என்றான். இதை வைத்துக்கொண்டு நாமும் நாய் நன்றியுடையது, என்று பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது நியாயமா?

நாம் சொல்லவேண்டிய கருத்துக்களை இலக்கிய ரீதி யாகச்சொன்னால் எதிர்க்கின்றவர்கள் இருக்க மாட்டார்கள். வள்ளுவர் கண்ட சமுதாயத்தையும் கம்பர் கண்ட சமுதாயத்தையும் நாம் மக்களுக்கு எடுத்து விளக்கிக் காட்டவேண்டும்.

"நாம் அன்று தமிழர், இன்று இந்தியர்; அடுத்த தலை முறையில் உலகத்தவர்"என்றுதான் வரும், மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்த - பரிபூரணமாகச் செய்ய இலக்கியம் பயன்படுமாறு செய்யவேண்டும். உணவுப் பஞ்சம் உடைப் பஞ்சத்தைத் தீர்க்கவேண்டும் என்றாலும் மனிதன் வாழத் தகுதியுடையவனாக ஆக இலக்கியம் அவசியமாகும்.

இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குழு அமைத்திருக்கிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டுக்குத் திருக்குறளை இந்திய அரசாங்கம் தேசீய நூலாக ஏற்றுக் கொள்ளவேண்டும். ஒரு மொழியால் தேசீய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.