பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

351


அந்த அறிவுக்குப் பயன் உண்டு என்கின்றார். அறிவு இருந்தாலும் அது அன்பினுடைய அடி நிழலிலே வந்து தழைக்க வேண்டும். அவ்வாறு அன்பின் அடி நிழலிலே வந்து புகாது போனால் அதற்கு மரியாதையும் மதிப்பும் இல்லை என்பது போல,

'அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை'

என்று பேசுகின்றார். படித்தவர்கள் - சான்றோர்கள் நிறையப் பேர் இருக்கலாம். ஆனாலும், பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாது போனால் 'அறிவினால் ஆகுவதுண்டோ?' என்று கேட்கின்றார். அது மட்டுமன்று. அறிவு நெறிக்குக் குறைகளும் குற்றங்களும் உண்டு என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அன்பு நெறிக்கும் அவர் குற்றம் குறை கற்பிக்கவில்லை. 'புல்லறிவாண்மை' என்கின்றார்-அறிவு 'மயங்கும்' என்கின்றார்-வறுமை அறிவைக் கொல்லும் என்று சொல்லுகின்றார். ஆனால், வறுமை அன்பைக் கொல்லும் என்று அவர் குற்றம் குறை கற்பிக்கவில்லை. 'புல்லறி வாண்மை' என்கின்றார்-அறிவு 'மயங்கும்' என்கின்றார்-வறுமை அறிவைக் கொல்லும் என்று சொல்லுகின்றார். ஆனால், வறுமை அன்பைக் கொல்லும் என்று அவர் எங்கும் சொல்லவில்லை இப்படிப் பல்வேறு வகைகளிலும் பார்க்கின்றபொழுது, திருக்குறளில் அன்பு நெறியே மிகுதியும் வற்புறுத்தப் பெற்றிருப்பதை யுணரலாம்.

இனி, அறிவையும் அன்பையும் ஒப்பு நோக்கிப் பேசுகின்ற இடத்தில், திருவள்ளுவர் என்ன சொல்லுகின்றார் என்பதுதான் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும். அறிவு நெறியின் மேன்மையைப் பற்றிக் கூறுகிற குறட்பாக்களில் அறிவை வலியுறுத்திக் கூறுகிறார். அதுபோல 'அன்புடைமை' அதிகாரத்தில் அன்பை வலியுறுத்துகிறார். ஆனாலும் இரண்டையும் ஒப்பு நோக்கிப் பேசுகின்ற