பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆதலால், தமிழ்நாடு முழுவதும் சிறு தொழில்களைத் தொடங்க முன்வரும் படித்த இளைஞர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும்தர தமிழ்நாடு அறக்கட்டளை ஆலோசிக்கலாம். அல்லது கிராமப்புறங்களில் சிறு தொழில்களைத் தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் நிறுவனத்திற்கு முதலீடாக இட்டுவைப்பாக நபர் ஒருவருக்கு ரூ. 3500 வீதம் வழங்கலாம்.

இன்று தமிழ்நாட்டிலும் சரி, இந்திய நாட்டளவிலும் சரி மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு குறித்து நாடு தழுவிய விவாதம் நடக்கிறது. இஃதொரு நல்ல சகுனம். பிற்படுத்தப்பட்டோருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுகள் பற்றிய சட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் மகிழ்ச்சிக்குரிய நட வடிக்கைகளே! ஆயினும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோர் பெரும்பாலும் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் தரமான கல்வி இல்லை. பொதுவாக ஆரம்பக் கல்வியில் அதிலும் குறிப்பாக மூன்றாவது வகுப்பு வரை போதிய கவனம் செலுத்தினால் நல்ல தரமான படிப்பாளிகளை எதிர்கால அறிஞர்களை உருவாக்கமுடியும். இத்துறையில் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது. தமிழ்நாடு அறக்கட்டளை, தமிழ்நாட்டின் சிற்றுரர்களில் உள்ள ஆரம்பப்பாட்சாலைகள் சிலவற்றைத் தரமான கல்விகொடுக்க முயற்சி செய்வது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் துணை செய்யும்.

இஃது ஓர் அறிவியல் உலகம், இன்றைய உலகத்தை அறிவியல் இயக்குகிறது. இயந்திரமூளை வந்துவிட்டது. இயந்திர மனிதன் உருவாகிவிட்டான். இத்துறையில் மற்ற நாட்டு மக்களைப்போல் தமிழ்மக்கள் வளரவேண்டும். அப்போதுதான் உலகத்தோடு நமது நாடும் ஒருசேர வளர முடியும். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுத்துக்களைப் பெற்ற ஜப்பான் அறிவியல் துறையில் குறிப்பாக