பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

43


முன்னிட்டும் ஆசிரியரே மாணாக்கர்களுக்கு விடைகளைக் கற்றுக் கொடுத்துவிடக்கூடாது. மாணாக்கர்களே முயன்று சரியான விடைகளைக் காணத் தூண்டவேண்டும். அவசியமிருப்பின் துணை வினாக்களைத் தொடுத்து, துணை வினாக்களுக்கு விடை காணும் முயற்சியின்மூலம், முக்கிய வினாவிற்கும் விடை காணும் முயற்சியில் ஈடுபடுத்தலாம். நல்ல அறிவைத் தேடும் பயணத்திலும், அடுத்துக் கருத்துக்கள் பரிமாற்றத்திலும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த முறையில் அமைவதே கல்வி.

கல்வி, புத்தகப் படிப்பு மட்டுமல்ல, அல்லது சில தகவல்களை மூளையில் திணித்துக் கொள்வதும் அல்ல. கல்வி, பன்முகத் தன்மையுடையது. கல்வியின் துறைகள் பலப்பலவாக நாளும் விரிவடைந்து வளர்ந்து வருவதை, கற்கும் மாணாக்கர்கள் உணர்ந்து, கல்விப் பயணத்தை விரிவுடையதாக்கிக் கொள்ளவேண்டும். கல்வி, ஆன்ம சக்தியின் வளர்ச்சிக்குத் துணையாக அமைவது. நம்மனோருடைய ஆன்ம சக்தியும், மனோ சக்தியும் பலாத்காரத்தினாலும் பயமுறுத்தலாலும் ஒடுக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நம்மிடம் ஆன்ம சக்தி இருக்கிறதா? அல்லது செத்துவிட்டதா? என்பதைச் சோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆன்ம சக்தியைத் தராத கல்வியும் ஒரு கல்வியா? பழையனவற்றை நினைவுகூர முடிகிறதா? புதியன எண்ணி ஏற்க முடிகிறதா? இன்றைய வாழ்க்கை ஆன்மாவின் உயிர்ப்பு இல்லாமல் இயந்திர மயமாகி ஓடிக்கொண்டிருக்கிறதே! இதுதான் கல்வியின் பயனா? இத்தகைய கல்வி நமக்குத் தேவைதானா?

மாணாக்கர்களின் நிலை

வாழ்நாளிலேயே மாணவப் பருவம் கிடைத்தற்கரியது. வாழ்க்கையில் சிறப்புக்குரிய - மாட்சிமைக்குரிய் பண்புகளைக் கற்றுச் சேர்த்துக் கொள்ளும் பருவம் இது! இன்று