பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

63


அமையவேண்டும். அப்படி அமையாவிடின் மக்கள் ஆட்சிக்கு ஊறு விளையும். ஆதலால், ஆசிரியர்கள் பள்ளியின் வாயிலாகச் சமூகத்தின் தரத்தைத் திருத்தி அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியப் பயிற்சிக்குரிய கல்வித் திட்டத்தில், கற்பிக்கும் திறமை, நெறிமுறையினாலான கல்விக்கு வலிமை சேர்த்தல், மாணாக்கர்களைப் புது வழிப்படுத்துதலுக்குரிய உத்திகள் அடங்கியனவாக பயனுள்ள மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். ஆசிரியர் அவரிடம் ஒப்படைக்கப் பெற்ற மாணாக்கனின் முழுமையான வளர்ச்சிக்குப் பொறுப்பேற்று அந்த மாணாக்கனை ஒரு மேதையாக, ஒரு நல்ல குடிமகனாக உருவாக்குதலில் வெற்றி பெறவேண்டும். இதுவே ஆசிரியர்களிடம் சமுதாயம் எதிர்பார்ப்பது. இத்தகு உயர்ந்த பொறுப்பு வாய்ந்த பணியை ஆசிரியர் செய்ய, அவர் பணி செய்யும் கல்விக்கூடம் ஒரு சுயாட்சித் தன்மையுடைய நிரந்தர அமைப்பாக விளங்கு வதும் அவசியம் என்பதையும் கல்வியாளர்களும் அரசும் உணரவேண்டும்.

இங்கே ஆசிரியர்களின் குறைகளையும் நிறைகளையும் எடுத்துக் கூறியிருக்கிறோம். குறைகள் மிகுதியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளனபோல் தெரிகிறது. இந்த விமர்சனங்கள் மதிப்புணர்வுடனும் நல்லெண்ணத்துடனும் சொல்லப்படுபவையேயாம். இவைகளையும் கடந்த சில நல்லாசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அண்மையில்கூட ஒரு நல்லாசிரியரை - இலட்சிய நோக்குடைய ஆசிரியரை நமக்கு 'தினமணி' (7-9-92) இதழ் அறிமுகப்படுத்தியது. அவர்தான் பவானிசாகர் மல்லியம்பட்டி ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி. அருணாசலம். மல்லியம்பட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்கள். ஐந்தாம் வகுப்பைக் கூடத் தாண்டுவதில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த