பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களிலும் அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான் அவர்கள் நிதானம்! நமது நிலை தீவிரவாதமே. மாலை ஆறு மணிக்குள் காவிரியில் மாலை அனுட்டானம் முடித்துக்கொண்டு வருவார்கள். கந்தசாமித் தம்பிரான் தனது அறைக்குச் சென்று படிப்பார். அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான் அவர்கள் அருள்திரு ஞானபுரீசர் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்வார். ஒரு. நாள்கூட ஞானபுரீசர் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்லத் தவற மாட்டார். இன்றும் தருமபுரம் மகாசந்நிதானம் இந்த வழிபாட்டில் நள்ளிரவிலும் தவறுவதில்லை. அது அவர்கள் செய்த புண்ணியம் போலும்.

கந்தசாமித் தம்பிரானைப் பொறுத்த வரையில் வியாழக்கிழமைகளில் கோயில் வழிபாட்டுக்குப் போவார். மற்றபடி கோபுர தரிசனம்தான், படிப்புக் காலத்தில் கந்தசாமித் தம்பிரானுக்கு மற்றவர்களைவிட நன்றாகப் படிக்க வேண்டும், வகுப்பில் முதல் நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம். ஆதலால், அந்தக் காலத்தில் விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து படிப்பார். அன்று தொடங்கிய அந்தப் பழக்கம் இன்றளவும் மாறவில்லை . காலை மூன்று மணிக்கு எழுந்து படிக்கும் கந்தசாமித் தம்பிரான் விடியல் ஐந்து அல்லது ஐந்தரை. மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்து விடுவார். ஒரு நாள் காலை உடன் பயில்வோராகிற அருள்திரு சோமசுந்தரத் தம்பிரான், கோ. முருகையா ஆகியோருடன் பேசும்போது "படிக்கவே இல்லை. தூங்கிவிட்டேன்” என்று கந்தசாமித் தம்பிரான் கூறினார்.

கோ. முருகையா கந்தசாமித் தம்பிரானுடன் தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். நன்றாகப் பாடுவார். இவர் இப்போது அருட்செல்வர் நா. மகாலிங்கம் அரவணைப்பில் திருமுறைப் பணி செய்து வருகிறார். இவர் ஒரு நாள் காலை கந்தசாமித் தம்பிரான் அறையில் விளக்கெரிவதைப் பார்த்து