பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஞானப் பால் தரும் நிகழ்ச்சியினால் வெளிப்படும் மனித நேயம் உணரத்தக்கது. இந்த மனித நேயம் சமய நெறியினரின் ஒழுகலாறாக என்று அமையும்? இத்திருத்தலத்தில் கட்டளைத்தம்பிரானாகத் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பை முன்செய்த தவத்தின் பயன் என்று எண்ணி மகிழ்ந்தார் கந்தசாமித் தம்பிரான். ஆதலால், சீகாழித் திருத்தலக் கட்டளை விசாரணைகளில் ஆர்வம் மிகுதியும் காட்டினார். ஆனாலும் நடைமுறைகள் எளிதில் துணை செய்யவில்லை. திருக்கோயிலுக்கும் கட்டளை மடத்துக்கும் நெடுந்தூரம்! நாள்தோறும் மாலையில் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்வார். முன்னே கை விளக்கு, பின்னே சேவகர் என்ற நிலை! வழித்தடம் மாற இயலாது; மாறுவதில்லை.


14

ருடம் 1948... சீகாழித் திருத்தலத்தில் சித்திரைத் திருவிழா! சீகாழியில் தங்கித் திருவிழாவை நடத்த தருமை யாதீனம் மகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்றுக்கொண்டு கந்தசாமித் தம்பிரான் சீகாழிக்குச் சென்றிருந்தார். அதுபோது ஒரு நாள் மாலை 4 மணிக்குச் சீகாழித் திருக்கோயிலுக்கு ஆய்வுக்காகச் சென்றார். பொதுவாகக் கட்டளைத் தம்பிரான் களுக்கு இப்படி ஆய்வு செய்யும் பணி இல்லை! அப்படி ஆர்வம் தலையெடுத்தாலும் அங்குள்ள நிர்வாகத்தின் அனுசரணை போதிய அளவு இருக்காது; இவையெல்லாம் கந்தசாமித் தம்பிரானுக்குத் தெரியும். ஆயினும் கந்தசாமித் தம்பிரான் யாரோடும் இணங்கிப் போய்விடுவார்.

அப்போது சீகாழித் திருக்கோயிலின் கார்ப்பாராக (தலைமை நிர்வாகியாக)இருந்தவர் சிவசிதம்பரம்பிள்ளை என்பவர். இவர் நல்ல நிர்வாகி. இவருடைய பணிகள் விவசாயிகள் நிர்வாகம், வசூல், வழக்கு நிர்வாகம் முதலியன.