பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏன்? "உங்கள் ஜாதிக்கு நன்மை செய்தோம்” என்று கூறி ஜாதியின் ரீதியாக வாக்குகள் சேகரிக்க முடியாது. துரறலால் பயிர்கள் வளர்ந்து விடுவதில்லை. சலுகைகளால் சமுதாயம் வளர்ந்து விடுவதில்லை. மக்களைத் தற்சார்புடையவர்களாக, அறிவாளிகளாக, திறமைசாலிகளாக வளர்க்கும் முறையில் கவனம் தேவை. திட்டம் தேவை. இந்தக் கருத்துக்களை ஏற்பார்களா? பொதுவாக யாரும் ஏற்பதில்லை. அதனால், இயக்கங்களை நடத்துவதில் நமக்கு நம்பிக்கை இழந்தது. அண்மையில் இந்திய உயர்நீதி மன்றம்-மண்டல் கமிஷன் அறிக்கையின் மீது ஒரு வரலாற்றுப் புகழ்மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில் சில பகுதிகள் 1-10-80-ல் ரத்தினகிரியில் நடந்த திருக்குறள் பேரவை மாநில மாநாட்டுத் தீர்மானங்களைப் பிரதிபலிக்கின்றன. அதாவது,

1. பிற்பட்டோரில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது.

2. பதவி உயர்வுகளுக்கும்கூட ஒதுக்கீட்டுக்கொள்கை கூடாது என்ற தீர்ப்புகள். இவை ஓரளவு சமூகநீதிக்கு அரண் செய்யும்.


24

ரிய பல சான்றோர்களின் முயற்சியால் 1956-ல் தலைவர் பெரியாரை ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் வீட்டில் சந்தித்துப் பேச ஏற்பாடு. முற்றிலும் தனி ஏற்பாடு கூட்டம் இல்லை. அதுமட்டுமல்ல.சந்திக்கப் போகும் நிகழ்ச்சி செய்தியாகவில்லை; வதந்தியாகவும் உரு எடுக்க வில்லை.

'ஈரோட்டில் யாரை யார் சந்திப்பது? என்பது கேள்வி! ஐயத்துக்கு அல்லது யோசனை செய்யவேண்டியதற்கு அவசியம், இராமல் "மகாசந்நிதானம் இடத்துக்கு நான் போய்ச் சந்திக்கிறேன்" என்றாராம் பெரியார். அடுத்த வினா!