பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

181


கிடப்பவர்களை மற்றவர்களுடன் சமநிலைக்குக் கொண்டு வருவதற்குத் தான். ஆனால், இன்று நடைமுறையில் சலுகைகளைக் காப்பாற்ற ஜாதிகளைக் காப்பாற்றும் முறை தோன்றி வளர்ந்து வருகிறது. ஆதலால், சமுதாயத்தில் நிலவும் ஜாதி வேற்றுமைகளை அகற்ற கல்வி, பொருளாதாரம், சமூகத்தகுதி இவற்றில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற பிறப்பின் காரணமாக அமையும் ஜாதிகளை, ஏற்காமல், தாழ்ந்தும் பின்னடைந்தும் கிடக்கும் தகுதியையே அளவு கோலாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

மக்கள் தொகுதி மூன்று பிரிவினர். தாழ்த்தப்பட்டவர்கள் என்பது சமூகத் தகுதியில், கல்வியில், பொருளாதாரத்தில் தக்க இடம் பெறாதவர்கள். இவர்கள் அரசின் முழு உதவியையும் பெறத் தகுதியினர் என்று கணக்கெடுத்து அட்டை வழங்கலாம். இந்தப் பிரிவினர் இன்றைய ஆதி திராவிடர் சமூகம்) ஜாதிச் சான்றுகளைத் தவிர்த்துவிடலாம். அடுத்து, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். அடுத்து, கல்வி அல்லது பொருளாதாரத்தில் ஏதேனும் ஒன்றில் பின் தங்கியவர்கள். இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சமூகத்தைப் பிரித்து காலக்கெடுவுடன் கூடிய திட்டம் வகுத்து நிறைவேற்ற வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்து, முன்னேறியவர்களிடமிருந்து அட்டைகளைத் திரும்பப் பெற வேண்டும். முன்னேறாதவர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டு களுக்கு அட்டை முறையை நீட்டிக்கலாம். இப்போதுள்ள இட ஒதுக்கீடுகூடத் திட்டுத் திட்டாக ஒரு சிலருக்கே பயன்படுகின்றது. கடைக்கோடி மனிதனுக்குச் சென்று சேரவில்லை. இத்தகைய கருத்துப்போக்கு நமக்கு உண்டு. இந்தக் கருத்தை இப்போது இந்திய உயர்நீதி மன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அன்று அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனையை ஏற்க முன்வரவில்லை. முன்வரமாட்டா.