பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தமிழ்நாட்டில் ராய சொக்கலிங்கம் என்று அறிமுகமான ராய. சொ-வை அறியாதவர் யார்? நல்ல தமிழறிஞர். தமிழ் இலக்கியத்துக்கு கணிப்பான் போல விளங்கியவர். நம்பால் சாலப்பரிவு காட்டியவர். இவருக்குக் கோபம் வந்துவிட்டது! நீண்ட கடிதம் எழுதினார்-மனச்சாட்சியின் பெயரால் உறுதிமொழி எடுத்ததற்கு ! நாமும் நீண்ட கடிதமாக விளக்கமாகப் பதில் எழுதினோம். எதிர்பாராத சூழ்நிலையில் எடுத்த முடிவல்ல. நீண்ட மனப்போராட்டத்துக்குப்பின் எடுத்த முடிவு. உலகியலில் பொய் சொல்லும் வாய்ப்புகள் வரலாம் என்ற முற்காப்புணர்வுடனேயே திருவள்ளுவர்.

'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்...'


என்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கடவுள் முன்னால் உறுதிமொழி தர-சத்தியம் செய்ய உடன்படாது இறைவனை மகிழின்கீழ் இருக்க விண்ணப்பிக்கிறார். ஆதலால், ஒருவர் பொது வாழ்க்கையில் கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவுக்கு வாய்மையாளராக இருப்பது கடினம்! கண்ணோட்டம் கருதிப் பல வழுக்கல்களும் இழுக்கல்களும் வரும்! ஆதலால், 'தன்நெஞ்சறிவது பொய்யற்க என்ற மொழிவழி நடப்பதுதான் நடைமுறையில் இயலும் என்று விளக்கினோம். மேலும், சமய நெறிப்படி பார்த்தாலும் மனச் சாட்சி என்ற சொல்லேகூடக் கடவுளைக் குறிக்கும். எப்படி? மனதினது சாட்சி மனச்சாட்சி என்று விரியும். உயிருக் குயிராக விளங்கும் பரம்பொருளே மனத்தினுடைய சாட்சியாக விளங்குகிறது என்று கருதவும் இடமுண்டு ராய. சொக்கலிங்கம் ஒருவாறு சமாதானம் அடைந்தார்.

கலைஞர் எப்போதும் ஏதாவது புதுமையாகச் செய்வதில் ஆர்வமுடையவர்! விரைந்து முடிவெடுப்பார். முடிவெடுப்பதைத் துணிவுடன் செயலாற்றுவார். ஆற்றல் மிக்க பேச்சாளர் அண்ணாவின் அடிச்சுவட்டில் உடன்