மண்ணும் மனிதர்களும்
209
பிறப்புகளுக்கு மடல் எழுதி, நிலைமாறா அணி சேர்த்து வைத்துள்ளார். இவர் நம்மிடம் காட்டிய பரிவுக்குத் தமிழார்வம் மட்டுமே காரணம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தக்கார் ஒருவர் கலைஞரிடம், "அடிகளாரை நாம்தான் விரும்புகிறோம். ஆனால் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார். அவருடைய ஆதரவு முழுதும் காங்கிரஸுக்கு அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான்.” என்று கூறியுள்ளார். இதற்குக் கலைஞர், "நாம் அடிகளாரை ஆதரிப்பது கட்சிக்காக அல்ல. தமிழுக்காக!' என்று பதில் கூறியுள்ளார். கலைஞருக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. கலைஞரின் தமிழார்வம் பாராட்டி மகிழத்தக்கது.
அவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்வழிக் கல்வி கற்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை தர ஒர் அரசாணை பிறப்பித்தார். இந்த ஆணையைப் பிறப்பிக்க காரணமாக இருந்ததில் நமது பங்கும் உண்டு. தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த அரசு ஆணையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் அரசு ஆணையைத் திரும்பப் பெறுவதன் மூலம் அமைதி காண விரும்பி முதல்வர் கலைஞரை அணுகியபோது, "தமிழினால் பதவிக்கு வந்தோம். அதே தமிழினால் பதவி போகட்டுமே!" என்று உறுதியாகக் கூறினார். நாம்தான் பல காணங்களைக் கூறி 'லட்சுமணசாமி கமிஷனை நியமிக்கச் செய்து ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தோம்.
மேல்சபை உறுப்பினராக இருந்தபோது மகிழும் வண்ணம் கலைஞர் அரசின் வாயிலாக பல பணிகள் நடைபெற்றன. வள்ளுவர்கோட்டம் கருக்கொண்டது இந்தக் காலத்தில்தான்! இந்த அனுபவங்கள் முழுதும் எழுதினால், அது விரிவாகும்! அரசியல், சமூக வரலாறாகவும் அமையும்!