பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

221


செல்வம் கே.ஏ.கே-யை வட்டமிடும். கே.ஏ.கே. திருக்குறள் வழி நமக்கு அறிமுகம். தொடர்ந்து வரும் ஒரு புரவலர்.

இன்று குன்றக்குடி கிராமம் நாட்டில் உள்ள பல அறிவியல் ஆய்வு மையங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. தொழில் நுட்பம் வாங்கியிருக்கிறது. மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் விஞ்ஞானி டாக்டர் ஜி. தியாகராஜன் மிகவும் அக்கறை காட்டுகிறார். இவர் ஹைதராபாத் மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்த போது முந்திரி எண்ணெயிலிருந்து வண்ணப் பூச்சுக் குரிய பெயிண்ட் செய்யும் தொழில் நுட்பத்தைத் தகுதிக் கட்டணம் இல்லாமலே கொடுத்து உதவி செய்தார். இன்று இவர் முயற்சியால் ஐ.நா. சபையின் உதவியுடன் தோல் தொடர்பான தொழில் மையம் ஒன்று, குன்றக்குடியில் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டில் தொடங்க இருக்கிறது. மேலும், முன்பு மத்திய அறிவியல் ஆய்வு மையமாக இருந்தது இன்று Indian Institute of Chemical Technology என்ற பெயரில் விளங்குகிறது. இதன் இயக்குநர் விஞ்ஞானி ராமாராவ் ஆமணக்கு எண்ணெய் அடிப்படையிலான தொழில் நுட்பம் தந்து உதவியுள்ளார். விளக்கெண்ணெய் என்று சொல்லப்படும் ஆமணக்கு எண்ணெய் விலைமதிப்புள்ள பொருள். அயல்நாட்டு செலாவணி சேகரிக்கக் கூடியது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் செம்மண் பூமி. மூன்றுமாத வித்து ஆமணக்கு மழையிலேயே விளைவிக்கலாம். மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் உப்பு நிலங்கள் மேம்பாட்டுத்திட்டம் ஒன்றை குஜராத் மாநிலம் பவநகரில் உள்ள உப்பு அறிவியல் ஆராய்ச்சி மையம் தந்துள்ளது. இதைப்போன்று பெங்களுர் உணவு ஆராய்ச்சி மையம் என். ஆர். டி. ஸி. ஆராய்ச்சி நிறுவனம் போன்றவைகளும் தொழில் நுட்பங்களைத் தந்துள்ளன. இன்று குன்றக்குடி கிராமம் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலாம் ஆண்டைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நான்காவது ஐந்தாண்டுத்