பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திட்ட முடிவில் தன்னிறைவு பெறவேண்டும். இது நமது இலக்கு. திட்டப் பணிகள் வளர்ச்சித் தன்மை பொருந்தியவை. வளர்ச்சிக்கு ஏது முற்றுப்புள்ளி?

இனம், சாதி, மதம், அரசியல் கட்சி வேற்றுமைகள் இல்லாமல் ஒரு கூட்டுக் குடும்பமாகக் குன்றக்குடி வளர்ந்து வந்தது. வளர்ந்து கொண்டிருக்கிறது. தேவை - போதிய விழிப்பு உணர்வு, ஊழியர்களின் அயர்விலா உழைப்பு. குறிப்பாக, இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

குன்றக்குடி ஒரு மாதிரி கிராமமாக முழுமையடைந்து விடின் நமது பிறப்பின் நோக்கம் நிறைவேறும்.

35

ளமைக் காலம் தொட்டே நமக்குத் தேசியத் தலைவர்களிடத்தில் அளவற்ற ஈடுபாடு. அவர்களுள்ளும் அமரர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் மிகவும் ஈடுபாடு. பண்டித ஜவஹர்லால் நேரு, தம் அருமை மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களையும் (உலக சரித்திரம் என்ற புத்தகம்) "கண்டுணர்ந்த இந்தியா" Discovery of India என்ற புத்தகத்தையும் இந்த நாட்டு இளைஞர்கள் அனைவரும் படிக்கும்படி செய்யவேண்டும். இந்த நூல்கள் நாட்டுப் பற்றையும் சமூக சிந்தனையையும் தருவதில் தலை சிறந்தவை. இந்த நூல்களை நாம் பல தடவை படித்ததன் பயன் இன்றைய குறிக்கோள்.

இந்திய வரலாற்றின் சிற்பியாக - ஒப்பற்ற தலைவராக விளங்கிய நேருஜியின் காலம் பொற்காலம். நேருஜி இந்த நாட்டைச் சரியான திசையில் அழைத்துச் செல்ல அடி அடியாக எடுத்து வைத்தார். உள்ளேயும் சரி - வெளியேயும் சரி, அவர் சந்தித்த சோதனைகள் கணக்கில.

1957-62-ல் பண்டித நேரு அமைச்சரவையில் மரகதம் சந்திரசேகர் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார்.