பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4


அடிகளார் உவமை நயம்
செடியும்–ஆன்மாவும்



தொட்டி எவ்வளவுதான் அழகுடையதா இருந்தாலும், அதில் நடப்பெறுகிற செடி சிறந்ததாக-உயிரோட்டமுடையதாக இருந்தால்தான் உற்ற பயன் கிடைக்கும். அதுபோல், உடல் எவ்வளவுதான் வலிவும் பொலிவும் உடையதாக இருந்தாலும், உள்ளிருக்கும் ஆன்மா சிறந்ததாக இருந்தால் தான் சிறப்பு. செடியைப் பற்றிக் கவலைப்படாமல் தொட்டியைப் பாதுகாப்பது போல் பலர் ஆன்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் உடம்பைப் பேணிப் பாதுகாக்கிறார்கள். பூஞ்செடி இல்லையானால் தொட்டிக்கு என்ன மதிப்பு? பூஞ்செடிக்காகத்தான் தொட்டி என்பதுபோல, ஆன்மாவுக்காகத்தானே உடல்? ஆன்மா இல்லாத உடம்பு பூஞ்செடி இல்லாத தொட்டியைப் போன்றதுதான்.

கொலுவும்-மனிதனும்

பல பெரிய மனிதர்கள் தங்கள் வீடுகளில் நவராத்திரிக் காலங்களில் கொலு வைப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு கொலு வைப்பதன் தத்துவம் என்ன? அந்தக் கொலு போன்றதுதான் மனித வாழ்க்கை கொலு கலைவது போல மனித வாழ்க்கையும் கலைந்துவிடும் என்பதை உணர்த்தத் தான் கொலு ஆரம்பிக்கப் பெற்றது. ஆனாலும், பலர் தங்கள்