பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பசும்புல் பயிர் செய்ய இயலாத காலத்தில் பயன்படுத்துவதற்காகப் பசும்புல்லை Selaje முறையில் பாது காத்துப் பயன்படுத்தலாம்.

செலேஜ் முறையாவது அரை அடி இடைவெளிகள் விட்டு குழிகளை வெட்டி அதன் அடிப்பகுதியில் வைக்கோற் படுக்கை அல்லது பாலிதீன் பேப்பரை விரித்து, குழியின் பக்கங்களிலும் பாலிதீன் பேப்பர்களைத் தடுப்பாக வைத்து, புற்களை ஒருமுழ நீளத் துண்டுகளாக வெட்டி, பரப்பி வைத்து, அதன்மேல் ஆலைக் கழிவுக் கரும்புச் சக்கைகளை உப்புடன் சேர்த்துப் பரப்பவேண்டும்.

இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்றாகத் தேவையான அடுக்குகளை வைத்தபின், மேல்பாகத்தில் பாலிதீன் பேப்பரால் மூடி, காற்றுப் புகாதபடி மண்ணைப் பரப்பிக் குழியை நிரப்பிவிட வேண்டும். மூன்று மாதத்திற்குப் பிறகு, குழியில் வைக்கப்பட்ட புற்களை எடுத்துக் கால்நடைகளுக்கு வழங்க வேண்டும்.

பசும்புல்லை விரும்பி உண்பதைப் போல, மர இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. அதனால், தொடக்க காலத்தில் பசும் புற்களுடன் தழைகளைச் சேர்த்து அளித்துக் கால்நடைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.

மர இலைகளை 12 மணி நேரம் நிழலில் உலர்த்திக் கொடுத்தாலும் கால்நடைகள் விரும்பி உண்ணும். மர இலைகள் மேல் உப்புக் கரைசலைத் தெளித்து அல்லது வெல்லம் கலந்த தண்ணீரைத் தெளித்துத் தந்தாலும் மாடுகள் விருப்பத்துடன் தின்னும்.

கால்நடைகளின் வளர்ப்பில் வேளாண்மைக் காடுகளின் பங்கு மகத்தானது. எவ்வளவு புல் தீவனம் போட்டாலும் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலில் ஏற்படும் திருப்தி வராது. ஆதலால், ஊர்தோறும் மேய்ச்சல் தரைகள் அமைக்க வேண்டும். ஒரு மாடு, சுழற்சி முறையில்