பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

395


முதலீட்டுக்குச் சந்தை வட்டிசுடக் கிடைக்காது. குறைந்த வட்டிதான் கிடைக்கும்.

ஆதிபத்திய நஞ்சுக்கு மாற்று கூட்டுறவேயாம். கூட்டுறவு பயன் அளிப்பது, அதன் இயக்கத்தைப் பொருத்தது. கூட்டுறவு அமைப்பிலுள்ள அங்கத்தினர்கள் அதன் செயற்பாட்டிற்கேற்ப, பயன் அடைவர்.

கூட்டுறவு ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுவது, கூட்டுறவு வெற்றி பெற அதன் அங்கத்தினர்கள் தொடர்ந்து இயங்கவேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்கும் கூட்டுறவே சிறந்தது. கூட்டுறவு மூலம்தான் கடை கோடி மனிதனையும் கடைத்தேற்ற இயலும்.

கூட்டுறவாளர், குறிப்பாகச் சுயநலமற்றவராக இருக்க வேண்டும். இந்தப் பண்பினைப் பெறுதல் எளிதன்று. குறைந்த பட்சம் நிர்வாணத் தன்மையுடைய சுயநலத்தையாவது தவிர்க்க வேண்டும். பொது நன்மைக்கு விரோதமான சுயநலம் உடையவர்கள் கூட்டுறவில் அங்கத்தினராகச் சேர்வதில் அர்த்தமில்லை.

கூட்டுறவில் அங்கத்தினராகச் சேர்வதன் நோக்கம் பலரின் துணை கொண்டு சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல், அதுபோலவே பலருக்கு இவரும் உதவ வேண்டும். பரஸ்பர உதவியின் மறுபெயரே கூட்டுறவு.

கூட்டுறவாளனின் விருப்பமும், விழைவும், பிறர் நலம் சார்ந்ததாகவே இருக்கும். கூட்டுறவாளன் பிறருக்குச் செய்யும் உதவியைக் கடமையாகவே கருதுவான். அந்த உதவிக்குக் கைம்மாறாகப் பிறிதொரு உதவியையோ, நன்றியையோ, பாராட்டுக்களையோ எதிர்பார்க்கக் கூடாது.

கூட்டுறவாளன் எப்போதும் சொல்ல முந்தமாட்டான்; கேட்பதிலேயே ஆர்வம் காட்டுவான்; அவசியம் ஏற்படும் பொழுது சில சொல்லுவான்; பலர் வாயிலாகவும் கேட்கவே விரும்புவான். கூட்டுறவாளனின் உரிமைகள் பின் தள்ளப்