பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

401


கருவிகள், செயல் செய்யும் பொறிகள் அனைத்தும் அமைந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன? பயன் தான் என்ன? அறிந்துகொள்ள வேண்டாமா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?

உடம்பொடு உயிர் பொருந்திய நிலையில் வாழ்வுக்கு உயிர்ப்பாக இருப்பது மூச்சுக் காற்று! மூச்சுக் காற்று அடங்கினால் உயிர்ப்பு நின்றால் மரணம். அதனால், உடலில் உயிர்ப்பு நிலை இருக்கும்பொழுதே தகாதனவற்றை யெல்லாம் புறத்தே தள்ளி, நல்லன கொள்ள வேண்டாமா? எண்ணுங்கள்! சிந்தனை செய்யுங்கள்!

தேடி, சோறு நித்தம் தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசி, வேடிக்கைமனிதராய் மாண்டு போகக் கூடாது. புகழ்மிக்க வாழ்க்கை வாழ்தல் வேண்டும். அதனாலன்றோ, திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியலின் முடிவில் 'புகழ்' என்று ஒர் அதிகாரம் வைத்தது. புகழ் பெறுதல் என்பது எளிதன்று; இமயத்தின் உச்சியில் ஏறுவதினும் கடினமானது. பேச்சால், எழுத்தால் பாராட்டு வரலாம். அது புகழன்று. பதவிகளால் சுற்றி நின்று பயனடைவோர் வானளாவப் புகழலாம். அதுவும் போலியேயாம்! விளம்பரம் தான் ! புகழன்று!

செயல்வழிச் சாதனைகள் செய்வதுதான் புகழ் பெறுவதற்குரிய வழி! அந்தச் சாதனைகளும் கூட நாட்டின் வரலாற்றை நகர்த்துவதாக அமைய வேண்டும்; மானுடத்தை அரித்துத் தின்று அழிக்கும் சாதிப்பிரிவினைகள், கொடிய நோய்கள், வறுமை ஆகியவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியே புகழ்மிக்க பணி! அதுவே வாழ்க்கையின் குறிக்கோள்! இலட்சியம்!

சென்ற காலத்தில் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த சாதித்த சாதனைகளாலேயே இன்று நம்முடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், மனித