பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

411


பணிகளுக்கு ஒத்துழைப்போம்! அரசு தீட்டும் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உடன் நிற்போம்! அரசின் அந்நியக் கடன்களைக் குறைக்க, சிறுசேமிப்பில் முதலீடு செய்வோம்! எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை நடத்துவோம்! வளர்ப்போம்!

நமது நாடு ஆன்மிகத்தில் - சமய நெறிகளில் செழித்து வளர்ந்த நாடு. வேதங்களும், உபநிடதங்களும், சாத்திரங்களும், திருமுறைகளும், திவ்வியப்பிரபந்தமும் பெற்று விளங்கும் நாடு. இன்றும் இந்தியா உலகிற்கு அளிக்கக் கூடியது ஞானம்! ஆன்மிகம் என்பது கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; வழிபாடு மட்டுமல்ல; சமயநெறி சார்ந்த சடங்குகளும் அல்ல.

ஆன்மிகம் என்பது ஆன்மாவின் - உயிரின் தரத்தை, தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் கொள்கை வாழ்க்கை முறை நாத்திகர்களுக்கும் கூட ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. அன்பு, பொறுத்தாற்றும் பண்பு, மனிதர்கள் மீது விருப்பு - வெறுப்பற்ற உளப்பாங்குடன் பழகுதல், பிறிதின் நோய், தந்நோய் போல் போற்றுதல் ஆகிய உயர் பண்புகளைப் பெறும் முயற்சி முதலியன ஆன்மிகம்.

இந்த முயற்சியுடைய வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை இவைகளைத் தனியே பெறமுடியாத நிலையில் பெறுதலுக்குரிய சாதனம் கடவுள் வழிபாடு! கடவுளை "எண் குணத்தான்" "குறைவிலா நிறைவு" "கோதிலா அமுது" "என்னுடைய அன்பு" என்றெல்லாம் போற்றுவர்.

கடவுளை வழிபடுதல் என்பது கடவுள் வழி நிற்றல் - வாழ்தல் என்பதாகும். கடவுளை முன்னிட்டு வழிபாடு நிகழினும் அந்த வழிபாடு கடவுளுக்கல்ல; ஆன்மாக்களுக்கே! அன்பில் பழுத்த மனம் பெறுதல் ஆன்மிகம். பிறருக்கென முயலும் வாழ்க்கை நெறி, ஆன்மிக நெறி. தியாகங்கள் செய்வது. ஆன்மிக வாழ்க்கையின் அடையாளம். "தியாக