32
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
என்கிறோம். புதிய பெரியவர்கள் “பேரவையில் தமிழர் மடாதிபதிகள் பலர் இருக்கிறீர்கள். நாங்கள் பார்ப்பனர்கள் ஒரிருவர் தாம் இருக்கிறோம். அதனால், உங்கள் கருத்து அரசாங்கத்தின் கருத்தாகிவிடுமே” என்று வெளிப்படையாகச் சொன்னார். தமிழர்-பார்ப்பனர் என்று பிரிக்கிறார்; அரசாங்கத்திலிருந்து பிரிந்து விடவேண்டுமென்கிறார். இதில் அடிப்படையில் நல்லெண்ணம் இல்லை என்று புரிந்துகொண்டோம் கூட்டம் ஒத்திவைக்கப்பெற்றது. அது மட்டுமா? புதிய பெரியவர் பேரவை அலுவலகத்திற்கு வந்த பொழுது ”சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்” என்ற அப்பரடி களின் அருள்மொழி தாங்கிய சுவரொட்டியைப் பார்த்து இந்தப் பாடல்களையெல்லாம் பேரவை பிரச்சாரம் செய்யலாமா? என்று கண்டித்தார். இரண்டொரு நாட்கள் ஓடின. தமிழ்நாடு அரசு கலைக்கப் பெற்றது. நெருக்கடி காலம் அறிவிக்கப் பெற்றதும் புதிதாக அமைந்த ஆளுநர் ஆட்சி, காஞ்சி காமகோடி பீடம் புதியவரின் குரலாக இருந்து பேரவையின் மீது பழிதுாற்றியது. நிதி உதவி இல்லை என்று அறிவித்தது. அன்று (28-12-1985) காமகோடிபீடம் புதிய பெரியவர் பேசிய பேச்சின் தொனிக்குரிய பின்னணியைப் புரிந்துகொள்ள முடிந்தது.
நெருக்கடி காலத்தில் நமக்கும் மிகுந்த நெருக்கடி இருந்தது; பேரவைக்கும் நெருக்கடி ஏற்பட்டது. மாநிலக் குழுவை மீண்டும் கூட்டினோம். மாநில ஆளுநராட்சிக்கு நம்மிடம் கடுமையான அணுகுமுறையிருப்பதை அறிந்து பேரவையைக் காப்பாற்றும் நோக்கத்தோடு, போற்றுதலுக் குரிய மயிலம் ஆதீனகர்த்தரவர்களைத் தலைவராகத் தேர்ந் தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். பேரவை, அரசிலிருந்து விலகி விட்டதால் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடம் புதிய பெரியவர்கள் பரிந்துரையின்படி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள். இதற் கிடையில் பேரவை பெயர் மாற்றத்திற்கும் வேறு சில மாற்றங்