பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

31


யாகப் பேசினார். பேரவை மாநிலக்குழுவைக் கூட்டும்படிக் கேட்டுக்கொண்டார்கள். நாமும் அவர்கள் விருப்பத்தை ஏற்று, அப்போது பேரவை, மாநிலக்குழு கூடவேண்டிய அவசியமில்லையென்றாலும், கூட்டினோம். கூடுவதற்கு முதல்நாள் சந்தித்தபொழுது, முதல்தடவை சந்தித்த பொழுதிருந்த பாங்கு இல்லை; சற்றுமாறுபட்டிருந்தது. மாநில அரசைக் கடுமையாகச் சாடிப் பேசினர்; நாம் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தமைைையக் கடுமையாக விமர்சனம் செய்ததோடு இவையெல்லாம் மத்திய அரசுக்குப் பிடிக்காதவை என்றார். அவர் பேச்சின் தொனி அவருக்குப் பின்னணியாக ஒருபலம் இருக்கிறது என்பதை அன்று புலப் படுத்தியது. மறுநாட்காலை மாநிலக்குழு கூடியது. முதலில் தமிழ்நாடு அரசின் நமது சமய நிறுவனங்கள், பேரவைக்கு நிதிவழங்கும் சட்டத் திருத்தம்பற்றித்தான் விவாதம் எழுந்தது. அன்றைய மதுரை ஆதீன கர்த்தரவர்களும், காஞ்சி காம கோடி பீடம் புதிய பெரியவாளும் இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்ததோடு, தமிழக அரசைக் கடுமையாகச் சாடினர். அப்பொழுது நாம் சொன்னபதில், "தமிழ்நாடு அரசு விரும்பி இதைச் செய்யவில்லை, நாம் கேட்டுக் கொண்டதன் பேரில் செய்திருக்கிறது. இது பேரவை வளர்ச்சிக்குப் பாதகமென்றால் வேண்டாம் என்று சொல்லிவிடலாம்" என்றோம். "இதனால் பேரவைக்கு நல்லது தானே தவிரக் கெடுதல் இல்லையே" என்றும் எடுத்துச் சொன்னோம். உடனே காஞ்சி காமகோடி பீடம் புதியபெரியவர் இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம் "பேரவை அரசு நிறுவனம் (தன்னாட்சி நிறுவனம்- Statutary Body) போல் ஆகிவிடுகிறது. இனி அவர்கள் பேரவையைத் தானே கலந்து ஆலோசிப்பார்கள்" என்றார். நாம் உடனே “இதுவரையில் நமது அமைப்பு அரசாங்க அந்தஸ்து பெறாதிருந்தது - இப்பொழுது பெற்றது நல்லது தானே! அரசினர் பேரவையைக் கலந்தாலோசித்துச் செய்வார்கள் என்றால், அதனால் பேரவைக்குப் பெருமை தானே.”