பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

457


மணித்திருநாட்டுக்கு வருகை புரிந்து செந்தமிழையும், சிவ நெறியையும் வளமாக்கப் பேருதவி புரிந்து வருகின்றார்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பதையும் மக்களுக்கு அழகாக எடுத்துரைத்தும் வருகின்றார்கள்.

சமீபத்தில் அடிகளார் அவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் மின்வேகத்திற் சென்று இனிய பல சொற்பொழிவுகளை ஆற்றித் திருமுறையின் சிறப்புகளை எல்லாம் மக்களின் உள்ளங்களில் பதிய வைத்தார்கள்.

தவத்திரு அடிகளாரின் நாவிலிருந்து உதிர்ந்த கருத்துக் களை திரட்டி நூல் வடிவில் தந்துள்ளார் எங்கள் அன்பர் ஈழத்துச் சிவானந்தன். செந்தமிழ்ப் பற்றும் இறைபக்தியும் நிறைந்த இளைஞர் சிவானந்தனுக்குத் தமிழ் மக்களின் நன்றி உரியது.

ஈழத்துச் சிவானந்தன் தமிழ் கூறும் நல் உலகத்துச் சிவானந்தனாக விளங்க வேண்டுமென்பதே எமது பிரார்த்தனையாகும்.

தமிழ் வழ்க!

இராஜ. அரியரத்தினம்

'கலாநிதி'
சாவகச்சேரி
இலங்களை 3-4-83


3. குறட் செல்வம்

1989-ஏப்ரல்

மதிப்புரை

வள்ளுவன் குறளை வையகம் முழுதும் அறியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள விளக்கமும் அதிகம்.

கு.xvi.30

கு.xvi.30