பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

465



அணிந்துரை
(புனிதநெறி)


(டாக்டர் மெ. சுந்தரம், எம்.ஏ, எம்.லிட், பிஎச்டி)
தமிழ்துறைத் தலைவர், மாநிலக் கல்லூரி, சென்னை.

சமயம் என்பது போலிச் சடங்கு நெறியன்று; அன்பையும் அமைதியையும் நல்கி வாழ்வை உயர்த்தவல்ல நெறி. சமயம், பெயரால் பலவாக இருக்கலாம். ஆனால் எல்லாச் சமயங்களும் உலகுக்குணர்த்தும் மெய்ப்பொருள் ஒன்றேயாம். "வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே நின்விளையாட் டல்லால் மாறுபடும் கருத்தில்லை” என்பது தாயுமானார் கூற்று. இன்றைய உலகின் துன்பத்திற்கும் துயரத்திற்கும் அடிப்படைக் காரணம் அது சமய நெறியைப் போற்றாமையேயாம். இவ்வுண்மையை உணர்ந்து தமிழுலகிற்குப் புனித நெறி சமய நெறியே என்ற உண்மையை தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். அவர்தம் திருவாக்குகளின் தொகுப்பே "புனித நெறி" என்னும் இந்நூல்.

சமயத் துறையில் போலிகளின் செல்வாக்கு மிகுந்ததே அதன் வீழ்ச்சிக்குக் காரணம். கோயில்களும் மடங்களும் சமய நெறியை வளர்க்கத் தவறிவிட்டன. அடிகளார் கூறியது போல, “இன்றோ கண்ணப்பர்களை வளர்க்க நம்முடைய கோவில்கள் விரும்பவில்லை. சிவகோசரியர்களைப் பாதுகாக்கவே விரும்புகிறது" (பக்.42), இதனால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய சமய வீழ்ச்சி.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் உலகம் உய்ய வேண்டும் என்ற பேராசை உடையவர். துறவு பற்றி அடிகளார் குறிப்பிடும்போது "துறந்த பொருட்களைக் கொண்டு துறவியை நிர்ணயிக்க முடியாது. துறக்கக் கூடாததை அவன் துறக்காமல் இருக்கிறானா என்றுதான் காணவேண்டும் (பக்.58) என்று கூறுகிறார். அடிகளார்