பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

486

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


சிந்தனை. அருள்நளிை பழுத்த ஆள்வினையுடைமை. அஃறிணை எனத் தம்மை நிறுத்தும் தொண்டு இவை மூன்றும் சராசரி மனிதன் சமுதாயம் தழுவிய சமய அனுபவ முத்திர்ச்சியாளனாக நின்ற-உயர்குறிக்கோள் நிலைக்குரிய அடிப்படைகள்.

தருமகருத்தாக் கொள்கையை அடிகள் விளக்கும் போது அக்கொள்கையே புதிய வலிவுபெறும். இந்நூலில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்கள்.

"இப்பொழுது நம்மிடத்தில் பொருள் இல்லை. உடன் வந்துள்ள உதவியாளரிடம் பணம் இருக்கிறது. நாம் கேட்கும் பொழுது அவர் தருகிறார். அல்லது குறிப்பறிந்து தருகிறார். இங்கே தருதல் எந்த மனநிலையில் நிகழ்கிறதோ அதே மனநிலைதான் தேவை”.

சமய இலக்கியங்கள் சிவனடியார்களே. நடமாடுங் கோயில்களே எனக் கொண்டு, சமயம் என்பது வாழ்க்கை முறை என்பதைச் சரசாரி மனிதநிலையில் விளக்கிடும் உலகத் தத்துவச் சிந்தனையாளர்களையும் சமயச் சிந்தனையாளர் களையும் திட்டமிட்டுச் சந்தித்த சந்திப்பே இந்நூல். பிசிறு தட்டாத சிவானுபவ விளக்கமே சமயம்.

நான் கண்ட சேக்கிழார், நான் கண்ட காந்தியடிகள் எனக் கூறும் சிந்தனையை ஒதுக்கி, அருளில் தோய்ந்த சிந்தனையில், அருள் பழுத்த ஆள்வினையுடைமையுடன், 'பணிசெய்து கிடைப்பதே என முழங்கிய அஃறிணை உணர் வுடன் சமயத்தை-வாழ்க்கையை அமைத்துக் கொள்க என்று கூறி, சிவம் வாழ்த்துப் பொருள் அன்று; வாழ்வுப் பொருள் என்று உலக மக்கள் அனைவரையும் ஒருமைப் பாட்டுரிமையில் இணைந்து வாழ வேண்டும் என ஆணை யருளியுள்ளார்கள்.

என்றைக்கும் எந்தம் வாழ்பொரு ளாய
குன்றைக் குருமணி வாழ்க வாழ்க!

சென்னை-5

இங்ஙன்,

27-8–1981

வை. இரத்தினசபாபதி