பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

499



தவத்திரு அடிகளார் அவர்களின் தமிழ்ப்பற்றும், சமயப் பற்றும் நாடறிந்த ஒன்று. அவர் இதுவரை எண்ணற்ற அரிய நூல்களைப் படைத்துத் தமிழன்னைக்கும் காணிக்கை ஆக்கியுள்ளார்.

இருநூறு பக்கங்களைக் கொண்ட இந்நூல் அளவால் மட்டுமல்ல, எடுத்துக் கொண்ட பொருளாலும்! பெரிய நூல். படிக்கும் அன்பர்களுக்குப் பயன் நல்குவதில் சிறந்த நூல், பிரார்த்தனை, கட்டுரை வடிவில் அமைக்கப் பெற்ற சீரிய நூல்.

ஒரே மூச்சில் படித்து முடிக்கும் விதத்தில் நயமும் நடை அழகும் அமைந்திருக்கும் நல்ல நூல்; வாழ்க்கை முழுவதிற்கும் பயன்படும் ஆழமான நூல்.

நம் அனைவருக்கும் தேவையான நூல்! என்பதைத் தெரிவித்து அடிகளாரின் அருட்பணியினைப் பெரிதும் வாழ்த்துகிறேன்.வணங்குகிறேன்.

இந்நூலைச் சீரிய முறையில் வெளியிடும் கலைவாணி புத்தகாலய உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
இராம வீரப்பன்

தி. நகர்
சென்னை-17


பாராட்டுரை
(திருவருட் சிந்தனை)


முனைவர், தருமையாதீனப் புலவர்

கு. சுந்தரமூர்த்தி, எம்.ஏ., பி.எச்டி,

முதல்வர், செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள்.

காலம் என்பது அருவப் பொருள். அது உலகியல் நிகழ்வதற்கு ஏதுவாகக் கதிரவன் முதலிய அளவைகளால்