பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

530

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


என்றால் மிகையாகாது. அதனாலேயே செல்வத்திற்கு மாடு என்று பெயர் சூட்டியது வள்ளுவம், எனக் கூறும் பகுதி சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு வாரம் என்பது ஏழு நாள்களைக் கொண்டது. இறைவன் ஏழிசையாய் உள்ளான் என சைவ சமயம் கூறுகின்றது. செயற்கரிய செய்து வரும் பெரியார் ஆகிய தவத்திரு அடிகளார் அவர்கள் தமிழ்ச் சமுதாயம், இந்திய சமுதாயம் கை கொள்ள வேண்டிய அரிய பொருள்களை அள்ளித் தந்துள்ள பாங்கு சால்புடையது.

அடிகளார் அவர்கள் வானொலி வழி நிகழ்த்திய உரை காற்றோடு காற்றாய் கறைந்து போகாமல் நிலையாக மக்கள் உள்ளங்களில் உறைந்து போகின்ற வகையில் வரி வடிவில் அச்சேற்றி பதிப்பித்துத் தந்துள்ள பதிப்பாசிரியர் சீனி. திருநாவுக்கரசு அவர்களையும், சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ள கலைவாணி புத்தகாலயத்தையும் மிகவும் பாராட்டுகிறேன். தவத்திரு அடிகளார். அவர்கள் தமிழுலகம் விழிப்புற காலம் தம் கருத்துக்களை ஓயாது ஒலிக்கவும் தமிழன்னை போல் தரணியில் நிலைத்த புகழுடன் வாழவும் அன்னை ஆதிபராசக்தியை இறைஞ்சுகிறேன்.

சென்னை த. பெரியாண்டவன்
25-12-94


24. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்


1996 - மே

அணிந்துரை

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்


அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் சமயக் குரவர்கள் மூவரைப் பற்றியும் இருபதாம் நூற்றாண்டின்