பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

535



"அன்று வந்தெனை அகலிடத்தவர் முன்
ஆளதாக என்று ஆவணங்காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர் மிசைஒளித்த
நித்திலத் திரள் தொத்தினை"

என்று சுந்தரர் பாடுவதை நம் கண்முன் நிறுத்தும் அடிகளார், இறைவன் ஒரு தொண்டனுக்கு எப்படி நண்பனாக இயங்கித் "தம்பிரான் தோழ”ரான அரிய அற்புதத்தை நமக்கு விளக்கும் பாணி நம் உள்ளத்தை உருக்குகின்றது.

இறைவனையே ஏசும் உரிமை பெற்ற கதை நம்முன் விரியும் போது இறைக் கருணைக்கு எல்லை ஏது என்னும் தத்துவத்தையும் நம் முன் கொணர்கிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

"God is my Friend" story 20ம் நூற்றாண்டின் ஆப்பிரிக்க பிஷப் டூடு சொன்னதை அன்றே வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினார் ஒப்பற்ற சுந்தரர் பெருமான்.

திருவாதவூரர் வரலாறு என்றென்றும் தித்திக்கும் வரலாறு. அவர்தம் வாழ்க்கை ஒரு மாபெரும் தவ வாழ்க்கை அவரது வாழ்நாள் முழுவதுமே ஒரு வேள்வி, ஞானவேட்கை கொண்ட மணிவாசகப் பெருமானைப் புகழ்ந்து, அவரது தவ ஒளியினைத் தம் அரிய ஆற்றலால் நம்முன் குன்றக்குடி அடிகளார் நிறுத்தும் போது நாம் அப்படியே தடுத்தாட் கொள்ளப்படுகிறோம்.

நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்கள் நாமறிந்ததே, ஆயினும் குன்றக்குடி மகா சந்நிதானத்தின் மூலம் இவ்வரலாற்றை நாம் கேட்கும் போது நம் கண் முன்னே "கவனமாக்களின்" அதிசய ஊர்வலம், அவை எப்படி இரவோடிரவாக சாதாரண நரிகளான அற்புதம் இவை நிகழ்கின்றன. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் ஈசனை நீ நினைத்தால் அவன் உன்முன் கைகட்டி நிற்பான்