பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

540

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


பணியினை விட அவர் தமிழுக்கும்-திருக்குறள் நெறி பரப்புதற்கும் ஆற்றிய தொண்டினை நாடறியும்.

இறைப்பற்று உணர்வில் மேம்பட்ட நிலையிலும் சமுதாயக் கேடுகளையும் குறைகளையும் கண்டனம் செய்ய முற்பட்ட வடலூர் வள்ளலாரின் வழியில் சிந்தனை கொண்டவராகி, சைவமும் தமிழும் இருகண்ணெனக் கொண்டு நாடெங்கும் முழங்கிய ஞானியார் அடிகளின் வழியில் செயற்படுபவராகி, பொது நல நாட்டத்தில் அருள் உணர்வு வேட்ட தமிழ்த் தென்றல் திரு.வி.க. வளர்த்த நெறி யினைப் பரப்புபவராய், பெரியார், அண்ணா ஆகியோரிடம் மதிப்பு மிக்கவராய்த் தொண்டு ஆற்றிய தனிச்சிறப்புடையவர் அடிகளார்.

அடிகளார் தமது வாழ்வில் கண்டும் கேட்டும் உற்ற பட்டறிவின் பயனை மற்றவர்களும் பெற்றிட ஏதுவாக 'ஆனந்த விகடன்' ஏட்டில் தீட்டிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே 'மண்ணும் மனிதர்களும்' என்னும் இந்த நூலாக வெளிவந்துள்ளது.

இந்தக் கட்டுரைகளைப் படிப்பவர்கள், அவரது எண்ணப் போக்கையும் உளப்பாங்கையும் உணரலாகும். அடிகளாரின் சீரிய சிந்தனைகளை எல்லோரும் தெளிந்திட ஏதுவாக இதனை புத்தக வடிவில் வெளியிட முன்வந்த கயல் தினகரன் அவர்கட்கு எனது பாராட்டும் வாழ்த்தும் உரியவாம்.

க. அன்பழகன்