பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

548

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


வனப்புறக் கண்டவர் வளர்த்தும் வந்தவர்,
பண்டித நேருடன் பழகிய பண்பினர்,
பண்டைய கொள்கை பகுத்துணர்
பெரியார் தொடர்பும் பொதுமையும் மலரும் தோட்டம்.
அடரும் பகைமை அண்டாக் கோட்டை,
ஏற்றத் தாழ்வுகள் இல்லாப் புதுமை,
சாற்றத் துடிக்கும் சமநிலைப் பாசறை,
கலகமில் உலகம் காணத் துடிக்கும்
உலக அமைதிக் குழைக்கும் வெண்புறா.
இனைய நலன்கள் விளையும் நோக்குடன்
புனையும் துறவு பூண்டவர், அடிகள்
"மண்ணும் மனிதர்களும்” என்னுந் தலைப்பில் ::எண்ணியெழுதினர் விகடன் இதழில்;
நம் கயல் தினகரன் நாடித் தொகுத்து
என்மனம் களிக்க ஈந்தனர் நூலென;
வாழ்க வாழ்க மனித நேயம்
வாழ்க தமிழகம் வாழிய உலகே!
போற்றி உரை
(மண்ணும் மனிதர்களும்)


முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்

பல்லக்குப் 'பவனி', பக்தர்களுக்குத் 'தரிசனம்' அடியவர்களுக்கு ஆசி வழங்குதல் ஆகியனவே ஆதீனத் தலைவர்களின் பணி என்றிருந்த நிலையில், இரவு பகலெனப் பாராது, மக்களோடு ஒன்றிக் கலந்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்குகொண்டு, சமுதாயம் முன்னேறத் தொண்டாற்றுவதே உண்மையான சமயத் தொண்டு என்றெண்ணி மக்களிடையே உலா வந்து கொண்டிருந்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவருடைய 'உலா'