பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

551


சாதிக் கொடுமை, மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழிப்பதில் பெரியாரோடு ஒன்றிணைந்து செயலாற்றினார்.

பலருடன் கூடி வாழ வேண்டுமானால் முரண்பாடுகளை - மாறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் - விரிவு படுத்தாமல் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அடிகளாரின் ஆழ் மன எண்ணம்.

சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை அவர்களுடைய தொடர்பு அடிகளாரிடம் தமிழ்ப் பற்றை ஊட்டியது, அருட்டிரு விபுலானந்த அடிகளாரிடம் பணி விடை செய்ததால் தீண்டாமை விலக்கு உணர்வும் மனித நேயமும் அடிகளார்க்கு வாழ்க்கைக் குறிக்கோள்கள் ஆயின.

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட பிணைப்பால் மூடப் பழக்க வழக்கங்களை முறியடிக்க வேண்டுமெனும் உணர்வு மீதுTரப் பெற்றது. பேரறிஞர் அண்ணாவின் தொடர்பு. "மறப்போம்; மன்னிப்போம்” என்ற தத்துவத்தைத் தந்தது. இவ்வாறு ஒவ்வொருவரிடமும் பழகிய போது அடிகளார்க்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது போல, அடிகளாருடைய வாழ்வும் தொண்டும் நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன அது?

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்
அறிவு விரிவு செய் அகண்ட மாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானெனக் கூவு
பிரிவிலை எங்கும் பேதமில்லை;
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன், 'உடைமை மக்களுக்குப் பொது'
புவியை நடத்து பொதுவில் நடத்து;