பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

183


பொழுது தமிழன் தலைநிமிர்ந்து நிற்கத்தான் ஆசைப் படுகிறான். எனினும் தமிழ்ப் பெருமக்களுக்கு ஒன்று கூற விரும்புகிறோம்.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிற் பிறந்தார் என்ற கார ணத்தை வைத்துக்கொண்டுமட்டும் தமிழ்ப் பெருநூல் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு மட்டும் பெருமைப்படாது, திருவள்ளுவப்பெருந்தகையார் வழிநின்று வாழ ஒரு திருக்கூட்டம் இருக்கிறது என்ற சொல்லைப் பெற்றுப் பெருமைபெற வேண்டும். அதுதான் நாம் வள்ளுவருக்குச் செய்கின்ற கைமாறு-கொடுக்கின்ற காணிக்கை என்பதை நினைவுபடுத்த ஆசைப்படுகிறோம்.

இந்த நிலை நாட்டிலே வளருமானால் துன்பம் இல்லை; வறுமை இல்லை. இதனை உறுதியாய்க் கூறும் நம்பிக்கையும் உண்டு. வள்ளுவர் சொல்கிற அறநெறி வாழ்க்கை இந்த நாட்டில் காட்சியளிக்குமானால் இந்த நாட்டிலிருக்கின்ற இன்னல்களெல்லாம் மாய்ந்து போகும். இன்று பெரும்பான்மையும் நம்மை வருத்துகின்ற ஒன்று உணவுப்பஞ்சம்; உணவுப்பற்றாக்குறை. இந்தப் பற்றாக் குறையின் அடிப்பட்ை மழையின்மை. திருவள்ளுவர் உலகத்தைக் கண்டார்; மேகத்தைக் கண்டார்; வானையும் கண்டார்; மலையையும் கண்டார்; நீலத்திரைக் கடலையும் கண்டார். இவற்றையெல்லாம் ஒரு முதற் கடவுள் இயக்கு கிறார் என்று முதல் அதிகாரத்திற் சொல்லுகிறார். அப்படி அனுபவித்து, உலகத்தை உணர்ந்து கொள்ளுகின்ற அறிவு நமக்கு இல்லை. ஆனால் அவர் அதை நன்குணர்ந்து வான் துளியின் கண்ணேதான் உலகம் இருக்கிறது என்று வான் சிறப்பைக் கூறுகிறார். வள்ளுவர் வான் சிறப்பு என்று ஒர், அதிகாரம் பாடும் அளவுக்கு அந்த வான், பெருமை பெற்றிருக்கிறது. வான் துளியின் கண்ணே தான் ஒழுக்கம் நிலைபெற்றிருக்கிறது, நிலைபெற வேண்டும் என்று சொல்லுகிறார். ஒழுக்கம் நிரம்பப் பெற வேண்டும் என்று