பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

185


பொன்னும் மணியும் அளித்திருக்கின்றாள். இவ்வளவு செய்கின்ற தாய்க்கு ஒரு ஆசை உண்டு.

           வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
           வேண்டாமை வேண்ட வரும்!

இக்குறளில் வேண்டாமை என்ற ஒன்றை எவ்வளவு வேண்டுகிறார்! யாருக்கும் ஆசை உண்டு; முற்றும் துறந்தவர் கட்குக்கூட உண்டு. அதுபோன்று இத்தாய்க்கும் ஒர் ஆசை சில மாதங்கள் தாங்கி நின்று ஈன்றெடுத்த தாய் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது உண்டியும் உறையுளுந்தான். இதைக் கொடுக்காமற்போனால் ஊரார் தூற்றுவர் எனப் பயந்து நாம் கொடுத்துவிடுவதுண்டு. ஆனால் நில மகளாகிய இத்தாய் ஒன்று விரும்புகிறாள். எல்லா மக்களும் பொய்மை நெறி கடிந்து மெய்மை நெறி நின்று புகழ் பெறவேண்டும் என்று விரும்புகின்றாள். அந்த மகிழ்ச்சியிலே திளைக்கின்றாள். இவ்வாறில்ல்ையானால் வருத்தப்படுகின்றாள். மகிழ்ச்சியிருந்தால் தானே எதுவும் செய்ய இயலும். இப்பொழுதும் ஆலவாயண்ணல் சோமசுந்தரப் பெருமானைக் கண்ட மகிழ்ச்சியிலே-அரசுபுரிந்த அங்கயற்கண்ணியைக் கண்ட மகிழ்ச்சியிலே ஏதோ சில சொற்களை உங்களிடத்திற் சொல்ல வந்திருக்கின்றோம். இவ்வாறில்லாமல் வருத்த நிலையிருந்தால் பேசத்தான் இயலுமா? அவ்வாறு ஏதேனும் மனத்துயரம் நம்மிடையே கப்பிக்கொள்ளுமானால் நம் செயல்கள் செயற்படுவதில்லை; செயற்பட்டாற்கூட முழுதும் பயன் தருவதில்லை; ஆகவே, இந்த நில மகளாகிய அன்னை வருத்தப்படுகிறாள்; துன்புறுகின்றாள்; அழுகின்றாள். இங்கே கொஞ்சம் மருத்துவத்தைக் கலக்கின்றார் திருவள்ளுவர். ஓயாத கவலையும் வருத்தமுங்கொண்டு துன்புறும் உள்ளம் உள்ள ஒருவனைத் தொட்டுப் பார்த்தால் அவன் உடலில் வெப்பநிலை புலப்படும். அருகில் நின்றால் அவன் விடும் பெருமூச்சுச் சுடுதலை யுணர்வர். இந்த நிலை நிலமகளாம்