பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்மை மாறலாம். அவ்வளவுதான். உயிர் உலகத்தோடுள்ள தொடர்பே நிலையற்றது. இத்தொடர்பு மாறுதலுக்குரியது; மாறும். ஆதலால் தொடர்பின் அமைப்புகள், கூறுபாடுகள் மாறுவதற்கு முன்பு, உரியவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே ஆன்றோர் கருத்து. இளமை, உடம்பு, செல்வம் முதலியவற்றோடு உயிர்களுக்குள்ள உறவு சீக்கிரத்தில் மாறுதலுக்கு ஆளாவது சிலபொழுது அழிந்து மாறுபடும். இவற்றோடு உயிர்களுக்குள்ள தொடர்பே நிலையில்லாதது. பொருள்கள் நிலையில்லாதவையல்ல.

நில்லாத வற்றை நிலையின யென்றுணரும்
புல்லறி வாண்மை கடை

என்று வள்ளுவம் கூறுகிறது.

நிலையில்லாதனவற்றைக் கொண்டு நிலையாயின செய்தல் அறிவுடைமை. செல்வம் நிலையில்லாதது. ஆனால், செல்வத்தினைக் கொண்டு நிலையான பல அறங்களைச் செய்யலாம். செய்யலாம் என்று காலங்கடத்துவதாற் பயனில்லை. மனம் மன் வீட்டில் குடி புகுந்து கொள்ளும். பின் செய்ய மனம் வராது. அவா வெள்ளக் கடலுள் ஆழ்ந்து அழிவதைத் தவிர வேறு வழியில்லை. அதுபோன்றதே இளமையும். எப்பொழுதுமே காலம் மாதம், ஆண்டுக் கணக்கில் உருவம் திரண்டு ஓடிவிடுவதில்லை. நிமிடங்களாக, மணிகளாக ஒரு நாளாக அற்பமானவை போலக் காட்டி, ஆயுட் காலத்தை அரித்துச் சாப்பிடுவது கால நியதியின் கொள்கை நாள்தோறும் கிழிக்கின்ற நாட் காட்டியை காலண்டரை ஆண்டுத் தொடக்கத்தில் பார்த்தால் பல தாள்கள் அடங்கியிருப்பதால் பகுத்தும் உருத்தும் இருக்கும். நாள் ஆக ஆக ஒவ்வொரு தாளாகக் கிழிக்கப் பெற்றுக் கடைசியில் ஒரு தாளும் இல்லாமல் கிழிபட்டுப் போகிறது; உருவம் இளைத்து விடுகிறது. இது போன்றதுதான் மனிதனின் வாழ்நாள்களும், இன்று என்றும், நாளை என்றும் கழிந்து