பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

305


என்பர். அதற்காக நாணத்தைத் துறந்தும் கொள்கைக்காகப் போராடுவர். இதுவும் தவறு. கொள்கையைவிடக் கொள்கையைச் சாதித்துக் கொள்ளும் நெறியும் முறையும் தவறானவையாக இருக்கக்கூடாது. கொள்கைக்காக நாணத்தை இழந்துவிடக்கூடாது என்ற கருத்தும் இந்தக் குறளின் மூலம் பெறப்படுகிறது. இன்றைய சமுதாயப் பொது வாழ்க்கைத் துறைக்கு இந்த அறவுரை எவ்வளவு பயனுடையது என்பதை அன்புகூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

நாட்டில் ஆங்காங்கு நடைபெறும் பாவைக் கூத்தைப் பார்த்திருக்கிறோம். அரங்கிலாடும் பாவைகள் ஆட்டப்படுவதால் ஆடுமே தவிர, அவற்றுக்கு உயிர்ப்புமில்லை; உணர்வுமில்லை. அது போலவே நாணுடைமையை அகத்திலே கொண்டு வாழாதார் வாழ்க்கை மானுட வாழ்க்கையேயல்ல. அவர்களது வாழ்க்கையெல்லாம், ஆட்டபாட்டங்களெல்லாம் உயிரியக்க வாழ்க்கையல்ல. நாணாகிய உயிர் இல்லாதவரையில் அந்த உயிர் வாழ்க்கை, உயிர் வாழ்க்கையாகவே கருதப்பெறமாட்டாது அவர்கள் மிரட்டுவதும், உருட்டுவதும் வெறும் பொம்மலாட்டங்கள். அதனால் உயிர்களுக்கு உறுதியுமில்லை. பயனுமில்லை. இதனை,

"நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நானால் உயிர்மருட்டி யற்று"

என்று கூறிக் குறள் விளக்குகிறது.

ஆதலால், வாழ்க்கை என்ற மாளிகையில் உயிர் சிறக்க வேண்டுமாயின், நாணுடைமை என்ற வாயிற் கதவு திட்பமுடையதாக அமையவேண்டும். மாளிகையின் கதவு சிறப்புற அமையாது போனால், மாளிகையின் உள்ளேயிருக்கும் பொருள்களுக்கும் ஆபத்து உள்ளே உயிருக்கும், உயிர் பெற்றிருக்கும் உயரிய குணங்களுக்கும் ஆபத்து. அது போலவே, உயிர் வாழ்க்கையில் மனம் என்னும் மாளிகையில் தி.ii.20