பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

93


முரணானவை. வேற்றுமைப்படுத்தும் நெறியும், ஒருமைப் பாட்டுக்குத் துணை செய்யாது. உயர்வு தாழ்வு பாராட்டுதல், அவ்வழி இகழ்தல், அல்லது ஏற்றுதல் ஒருமைப்பாட்டுக்குத் துணை செய்யாது.

ஒரு மனிதன் மிகச் சிறந்த பண்பாளனாக, நாகரிகமுடையவனாக வளர்ந்து வாழ விரும்பினால், குறைந்தது ஐந்து மொழிகளையாவது படிக்க வேண்டும். வீட்டுச் சாளரங்களைச் சாத்தி விட்டால் காற்றோட்டமில்லை. அறை வெப்பத்தன்மையடையும். அதுபோல பிறமொழிச் சர்ளரங் களை அடைத்து விட்டால்-மனிதன் மிகச் சின்ன மனிதனாக மாறிவிடுவான். அவனை அற்பப் புத்திகளே ஆட்டிப் படைக்கும். இன்றைய தமிழன் மிகச் சிறந்த தமிழனாக வளர-நான்கு மொழிகளையாவது கற்க வேண்டும். அவனுடைய தாய்மொழியாகிய தமிழ், தமிழோடு உயர் கலைகளில் இணைந்து வளர்ந்துள்ள சமஸ்கிருதம், இந்தி யர்கள் பலரோடு பேச இந்தி, அறிவியற் கலைகள் கற்க ஆங்கிலம். பழந்தமிழ்ப் பண்பாட்டோடு ஒத்த, கலை நாகரிக முடைய கிரேக்க மொழி ஆகியன கற்றால், வாழ்வில் புத்துணர்வு தோன்றும். தாய்மொழிப் பணியில் முழுமையாக ஈடுபட்டவர்கள் பிற மொழிகள் பயின்றாலும், தாய் மொழியை மறக்க மாட்டார்கள். மாறாகத் தாய்மொழி அறிவில் முறுகிவளர்வர்.

அதுபோலவே இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரானாலும், தமிழைக் கற்காமல் ஒரு முழு இந்தியனாக உருப்பெற முடியாது. இங்ங்னம் பல மொழிகள் பயிற்சியும், பன்மொழிக் கருத்துக்கள் வெளிவரும் உணர்வும் தான் வாழ்வியலை வளர்க்கும். மொழிவழி வெறுப்பு சிந்தனையைத் தடுக்கும். அறிவுக்கு எல்லை கட்டும்: அருளுணர்வைத் தடுக்கும்; ஒருமைப்பாட்டுக்கு இடையூறாக முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இதனை நன்கு உணர்ந்த