பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



183


படுத்திக் கூறியிருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதுமட்டுமல்ல, உலகியலில் நோய்பற்றிக் கூறுவோர் பலருண்டு. நோயாளி கூட கூறிவிடுவான். ஆனால் நோயின் காரணத்தைக் கண்டறிந்து சொல்லுபவர் இல்லை. அப்படியே ஒரு சிலர் கண்டறிந்து சொன்னாலும் நோய் நீக்கத்திற்குரிய மருந்தினைத் தெளிவாக, அறிவியல் அடிப்படையில் காட்டுவதில்லை. திருவள்ளுவர் நோய் கண்டு காட்டினார். நோயின் காரணத்தையும் கண்டு காட்டினார். நோய் நீக்கத்திற்குரிய வழிமுறைகளையும் கண்டு காட்டினார். ஐயந்திரிபரக் காட்டி யுள்ளார். மனிதன் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறான். இதற்குக் காரணம் அவனுடைய மனமே. மனத்தில் தூய்மை இருந்தால் அதுவே அறம்-பேரறம், மருவுலகில் பல்வேறு அறங்களைச் செய்வதைவிட மனத் தூய்மையைப் போற்றி வளர்த்தால் சிறந்த அறம் என்று குறிப்பிடுகின்றார். அதுமட்டுமின்றி மனத்துாய்மையின்றிச் செய்யப்பெறும் வேறு பல அறங்களை வெறும் ஆரவாரத்தன்மையன என்றும் மறைமுகமாகக் கண்டிக்கின்றார். இந்த மனத்தூய்மையை அறிவாலும், அன்பினாலும் பெறமுடியும் என்று திருக்குறள் வழி காட்டுகின்றது.

திருக்குறள் ஓர் அறிவுநூல். நம்பிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் எந்த ஒன்றையும் வற்புறுத்தவில்லை. கடவுள் வழிபாட்டதிகாரத்திலும்கூட உலக இயக்கத்தின் பாற்பட்ட அறிவுணர்வின் அடிப்படையிலேயே திருக்குறள் கடவுள் வாழ்த்து தோன்றியுள்ளது. திருக்குறள் காட்டும் அறிவு வெறும் நூலறிவு அல்ல. ஆனாலும், கற்றல் கேட்டலின் மூலம் பெறும் அறிவைத் திருக்குறள் மறுக்கவில்லை. திருக்குறள் அறிவு என்று இறுதியாக எடுத்துக்கொள்வது. வாழ்க்கையின் அனுபவத்தையொட்டிய உணர்வுகளேயாகும். தீமையினின்றும் விலகி நன்மையின்பால் செலுத்துகின்ற அறிவையே அறிவு என்று திருக்குறள் போற்றுகின்றது. தீமைகளுக்குப் பிறப்பிடமாகிய அன்பின்மையை திருக்குறள்