பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



235


3. எது தவம்?

திருக்குறள் ஒர் ஒழுக்க நூல்-ஆயினும் விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்கநெறி அறநெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடைமுறைப் படுத்தக் கூடியவையாகவே கூறப் பெற்றிருப்பது எண்ணி உணரத் தக்கது. வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட-நடைமுறைச் சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை-வாழ்வாங்கு வாழ்தல் என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ஙனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக் காகவே. சிறந்த சமய நூல்களும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று இறுதியில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன, என்றே கூறுகின்றன. கடமைகளைச் செய்வதற்கு உயிர்கள் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்கின்றன. அதற்குக் களங்களே இல்லறம், துறவறம் என்றமைகின்றன. இவையிரண்டுமே கடமைகளின் பாற்பட்டனவே. இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவினவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதி விலக்குகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளேயுண்டு. இங்கு விதி விலக்குகள்-மிகமிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம். ஆயினும், இவ்விருவகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலேயாகும்.துறவறம் அல்லது தவ வாழ்க்கை என்றால் கடமைகளினின்று விடுதலை பெறுதலல்ல. கதே என்று தத்துவஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடிவிடுவ தன்று-உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன்