பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழியாக்க வேண்டும். இந்தக் கருத்தை நாம் 30-6-86-இல் நாகர்கோயிலில் நிருபர்களிடத்தில் பேட்டியில் கூறி 'தினமணி'யில் வெளி வந்துள்ளது.

நமது குரலின் எதிரொலியாகத் தமிழ் நாட்டில் பலரும் இதே செய்தியைக் கூறியிருக்கின்றனர். நடுவணரசு அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்களும் நடுவணரசு தமிழ் நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாக்கும் திட்டத்திற்கு உதவி செய்யும் என்று புலப்படுத்தியிருக்கிறார்கள். இது வரவேற்கத் தக்கது; மகிழத் தக்கது.

இனிய தமிழ்ச் செல்வ, தமிழ் நாட்டில் தமிழ் அனைத்துத் துறையிலும் வளர்ந்து செழுமை பெறுவதே தமிழர்க்கு நல்லது. இந்த இனிய பணியினைப் புதிய கல்விக் கொள்கை சாதிக்குமானால் அது வரலாற்றுச் சிறப்புடையதாக அமையும்.

இனிய செல்வ, ஆங்கிலம், தமிழ் பயில்வது குறித்து அடுத்த கடிதத்தில் எழுதுவோம்.

இன்ப அன்பு
அடிகளார்
7. தமிழ்மொழிவழிக் கல்வி-2

இனிய தமிழ்ச் செல்வ, நல்வாழ்த்துக்கள்!

உனது மடல் கிடைத்தது. நன்றி. வள்ளுவர் வழியைப் படிப்பதிலும் சிந்திப்பதிலும் உனக்கு இருக்கிற ஈடுபாடு மகிழ்வைத் தருகிறது. இதழாசிரியர் தே. கண்ணன் அவர்கள் மிக மிக மகிழ்வார்.

ஆம்! சென்ற கடிதத்தில் திருக்குறளை எடுத்துக் காட்டவில்லை! இது தவறுதான்! ஆனாலும் மடல் தொடர்கிறது, முடியவில்லை என்பதை நினைவில் கொள்க!

திருவள்ளுவர் 'கற்க’ என்று பொதுவாகத்தான் கூறினார். திருக்குறள் மானிட சமுதாயத்திற்காக இயற்றப்