பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போய்விட்டது. அதாவது ஆயுதங்களை ஒப்படைப்பது போலக் காட்ட-சில ஆயுதங்களை மட்டும் ஒப்படைத்து விட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு விட்டனர். பேரரசுகள் மதித்த ஒரு தலைவர்-சுதந்திரத்திற்காகப் போராடும் தலைவர் இங்ஙணம் செய்யலாமா? இனிய செல்வ, நீயே எண்ணிப்பார்! ஆயுதங்களை முடக்கி வைத்துக் கொண்டது மட்டுமல்ல. தனக்கு உடன்பாடிலாத-தன்னை எதிர்க்கின்றவர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இது சரியா? நியாயமா? இதுதான் தமிழ்ச் சாதியின் குணமா? இலங்கைத் தமிழர் என்றால் வேலுப் பிள்ளை பிரபாகரன் தலைமையில் உள்ள விடுதலைப் புலிகள் மட்டும்தானா? பாரதி வாசகத்தில் கேட்டால், "சீனத்தராய் விடுவாரோ?” இதுமட்டுமா, செல்வ! இலங்கையில் இதுவரையில் வாழும் இருவேறு இனங்களாகிய சிங்களருக்கும் தமிழர்க்கும் சண்டை வரவில்லை. வந்தால் தமிழ்ச்சாதி இலங்கையில் வாழாது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது விடுதலைப் புலிகள் சிங்களக் குடும்பங்களைக் கொல்லத் தொடங்கி விட்டனர். என்ன செய்வது! இந்திய அமைதிப்படை வேடிக்கை பார்க்கவா இலங்கைக்குச் சென்றது? இல்லையே! விடுதலைப் புலிகளால் தமிழர்களும்-சிங்களர்களும் கொல்லப்படாமல் தடுக்க முயன்றபோது விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையினருடன் போர்ப் பிரகடனம் செய்து போர் செய்து கொண்டிருக்கிறார்கள். இது நியாயமா? எந்த அடிப்படையில் நியாயம்? சாத்தியமற்ற ஒரு காரியத்திற்காக வலிந்து தற்கொலை செய்து கொள்வதைத் தியாகம் என்று சொல்ல இயலுமா?

விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையுடன் போராடுகிறார்களா? அல்லது அவர்களுக்குப் பின் ஏதாவது அந்நிய சக்தி வேலை செய்கிறதா? இனிய செல்ல, எது எப்படியாயினும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் தலைமையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளும், இந்திய