பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



385


இல்லாத நாடாக ஆகி வருகிறது. எங்கும் கலவரம்! கொலைகள்! தற்கொலைகள்! அரசுடைமைப் பொருள்கள் இழப்பு! ஏன் அரசே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இனிய செல்வ,

"பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு"

என்ற திருவள்ளுவர் வாக்கு உண்மையாகி வருகிறது.

இன்ப அன்பு
அடிகளார்
51. வருவாய்க்காக வழிமாறற்க!

இனிய செல்வ,

நமது தமிழகத்தில் மலிவு விலை மதுக்கடைகள் "நாட்டு மதுக்கடை" என்ற பெயரில் திறக்கப்பட்டு விட்டன. இது ஒரு வருந்தத்தக்க நிகழ்ச்சி. அதுவும் வள்ளுவர் கோட்டம் கண்ட பெருந்தகை கலைஞர் ஆட்சியில் மலிவு விலை மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏன், கலைஞர் உளமாரச் செய்கிறாரா? இல்லை! செய்யவேமாட்டார். இது முக்காலும் உண்மை! சத்தியமும் கூட! அப்படியானால் ஏன் திறக்கிறார்? நிதி நெருக்கடி, கள்ளச் சாராயம் இவைகளைக் காரணம் காட்டுகிறார். இனிய செல்வ, இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆயினும், நிதி நெருக்கடி அரசுக்கு! அரசு தனது நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண மக்களுக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கலாமா? அதுவும் கிராமப்புற ஏழை மக்களுக்கு உண்டாக்கலாமா? அரசாவது முயன்றால் புதிய வருவாய்களைத் தேடலாம்; தேட முடியும். அரசுக்கு வருவாய்க்குரிய வாயில்கள் ஏராளம்! அரசு தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள மக்களைச் சுரண்டுவது சிறந்த பொருளாதாரக் கொள்கையல்ல!

இனிய செல்வ மலிவு விலை மதுக்கடை மூலம் 530 தோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கிறது அரசு. அரசுக்கு 530

தி.26.