பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

486

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாராளுமன்றத்தில் நமது நிதியமைச்சர் தனது அலுவலகத்தில் மத்திய அரசில் வேலை பார்ப்போர் எண்ணிக்கையில் சற்றேறக்குறைய 38,500 பேர் வேலை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இன்னும் 8,000 பேருக்குச் சீட்டுக் கிழிக்கப் போகிறாராம். நமது மாநில அரசிலும் 10 ஆண்டுகளாகக் காலி ஏற்றப்பட்ட பணியிடங்கள் சற்றேறக்குறைய 27,000 காலியாக உள்ளன. ஒரு நடுநிலைப்பள்ளியில் மூன்றே ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இப்போது ஆசிரியப் பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் முழுவதும் அல்ல, அறை குறையாக, பொறுத்திருந்து பார்ப்போம்.

இனிய செல்வ, அரசுப் பணிமனைகளில் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை, ஆண்டு தோறும் 1 விழுக்காடு தான் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இனிய செல்வ, வேலையில்லாத் திண்டாட்டம் 300 விழுக்காடுக்கும் மேலாக வளர்ந்து வந்திருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 1989க்கு முன் பதிவு செய்தவர்களின் எண்களையே இப்போது அனுப்பி வருகின்றனர். எவ்வளவு தேக்கம் பார்! இந்த நிலையில் ஆட்குறைப்பும் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் 69 விழுக்காடு ஒதுக்கீடு என்ன பயன் தரும்?

இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒரளவு கல்விக்குப் பயன்படும். அதுவும் குறிப்பாகத் தொழில் கல்விக்குப் பயன்படும்.

இனிய செல்வ, போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யாத போது மாணவர்கள் எதைக் கற்பார்கள்? பட்டப் படிப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் ஒத்திசைந்து போக வில்லை. இஃது ஒரு தீய சுழற்சி வட்டம்! இனிய செல்வ. இந்தியக் குடிமகனின் பாதுக்ாப்பு, நீதித் துறையேயாம். நீதித்துறையை விஞ்சி அரசியல் சட்டத்தைத் திருத்துவது