பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



491


"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்"

(668)
இன்ப அன்பு
அடிகளார்
90. சாதிகள்-களைகள்
(1)

இனிய செல்வ,

"பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்ற திருக்குறள் நெறி இனி இந்தநாட்டை வென்றெடுக்குமா என்பது ஐயத்திற்குரியதாகி வருகிறது. எங்கு நோக்கினும் சாதிகளின் பெயரால் பேரணிகள், சாதிகள் மாநாடுகள், சாதிகளுக்கு இடையே பேதங்கள், சாதிக் கலவரங்கள், மதச் சண்டைகள், படுகொலைகள் இவையெல்லாம் நமக்குக் கற்றுத்தரும் படிப்பினை என்ன? இனிய செல்வ. இன்று நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ள அணிகளுக்கும் கூட உள்ளூர குளிர்சுரம் இருக்கிறது; பயம் இருக்கிறது. தங்களுடைய இருப்பை நிலையாக்கிக் கொள்ள சாதிகளைப் பயன்படுத்துகின்றன என்று தெளிவாகத் தெரிகிறது; புலனாகிறது. இனிய செல்வ, இதனால் விளையப் போவது என்ன?

தமிழினம் பல்குழுவாகப் பிரியும்; சாதி, குலம், கோத்திரங்கள் ஆழம்பட்ட நிலையில் வேரூன்றும். இந்தச் சிறு சிறு குழுக்களிடையே பகை வளரும்; கலகங்கள் நடக்கும்; சமுதாயம் என்ற அமைப்பு இருக்காது. சமூகம் என்ற அமைப்பு இருக்காது; வலிமை இழப்பர்; வாழ்வை இழப்பர். இனிய செல்வ, எல்லைகளைக் கடந்து தேசியத் தலைவர்களாக விளங்கினவர்களை-இன்றும் தேசியத் தலைவர்களாக மதித்துக் போற்ற வேண்டியவர்களை மிக முயன்று சாதித்தலைவர்களாக ஆக்குவது வரலாற்றுக்கு மாறுபட்டது. அந்த மாபெரும் தேசியத் தலைவர்களுக்கு