பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



495


வானானால் மனிதன் காலத்தின் முதுகில் முத்திரையைக் குத்தினால் "அசோகர் காலம்” என்பதுபோல அவன் பெயரைச் சுமந்து கொண்டு காலம் விளங்கும். இந்தத் தலைமுறையில் இந்தப்பேறு தமிழினத்திற்குக் கிடைக்குமா? தமிழரில் யாருக்காவது கிடைக்குமா? ஏன்? காத்திருப்பானேன்? முயற்சியைத் தொடங்குவோம்! முடிவு எப்படியானாலும் ஆகட்டும்! இனிய செல்வ, சாதிகளை மறப்போம்! பண்பாட்டு மலை உச்சியில் ஏறுவோம்! நம்முடன் பிறந்த மானுடப் பரப்பைப் பார்ப்போம்! மனித சமுத்திரத்தில் சங்கமமாவோம்! எல்லாரும் ஒன்றென முரசு கொட்டுவோம்; இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்!

இன்ப அன்பு
அடிகளார்
91. விருப்பங்கள்

இனிய செல்வ,

திருக்குறள் ஓர் அரசியல் நூல். திருக்குறள் முடியாட்சிக் காலத்தில் தோன்றினாலும் இக்காலத்திற்குரிய பண்புகளை விரித்துரைக்கத் தவறவில்லை. உண்மையில் - சொன்னால் இன்று பிரிட்டனில் நடைபெறும் முடியாட்சியும் குடியாட்சியும் கலந்த முறையைத் திருக்குறள் விரும்பியதாக இருக்கிறது. ‘நாகரீகம்’ என்ற சொல்லுக்கு உலக மொழிகள் சொல்லும் விளக்கம் வேறு. ஆனால், திருக்குறள் கூறும் விளக்கம் சிறப்புடையது. நண்பர்கள், பழகிய நட்புடையவர்கள் கொல்லும் நஞ்சைக் கொடுத்தாலும் விரும்பிக் குடிக்கவேண்டும். அப்படி விரும்பிக் குடித்தால் சாகாமல் வாழ்வர் என்பது திருக்குறள் கூறும் நாகரிகம். இனிய செல்வ, உன்னுடைய கேள்வி புரிகிறது! நஞ்சைக் குடித்தால் சாகாமல் இருக்க இயலுமா? என்பதுதானே உன் கேள்வி; இயலும் என்பது திருக்குறளின் பதில்!