பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



499


ஒத்துவருபவர்களை மட்டுமே நேசித்தல், மற்றவர்களைப் பகைவர்களாகக் கருதுதல், இன்னோரன்ன தீமைகள் வளர்ந்து வருகின்றன. நமது வரலாறு, பழைய வரலாறு. நல்வாழ்வுக்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டுகின்றன. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு, பாரி-கபிலர் தோழமை முதலியவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள்!

இனிய செல்வ, விருப்பங்கள் வளரட்டும்! அவ்விருப்பங்கள் வெறுப்புகளை ஈனுதல் கூடாது. "விதை ஒன்று. போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?” என்பது பழமொழி. இப்பழமொழி விருப்பங்களைப் பொருத்தவரை உண்மை யல்ல. விருப்பங்கள் வெறுப்புக்களை ஈன்றெடுத்தலே மிகுதி. இது தவிர்க்கப்படுதல் வேண்டும். தன்னை வியத்தல், மற்றவர்களிடமிருந்து விலகி உயர்ந்து அந்நியமாதல் என்பது கூடாது.

"புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி"

என்பது சான்றோர் வாழும் நெறி.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"

என்ற திருக்குறள் நெறி வழியில்-வள்ளுவர் வழியில்-நம் விருப்பங்களைத் திணிக்காது மற்றவர் விருப்பங்களை முன்னிறுத்தி அவை மாறுபாடாக அமையின் மருத்துவம் செய்து கூடி வாழ்வோம்!

இன்ப அன்பு
அடிகளார்
92. உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்

இனிய செல்வ, மனிதன் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உரியவன்; ஆளானவன்! எந்த ஒரு மனிதராலும் தனித்து வாழ இயலாது. ஒரோவழி இயன்றால் அந்த வாழ்க்கையில் மனிதம் மிளிராது; விலங்கியலே மேம்பட்டு விளங்கும்; பயனும் இருக்காது; பிழைப்பு