பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



99



ஒழுக்கமுடையராய் இருத்தலே குடிமக்களுக்குரிய சிறப்பு. ஒழுக்கமிலராயின் குடிமை நிலையிலிருந்து தாழ்ந்து கீழானவர்களாகிக் குற்ற இயல்பினர் வகையில் சேர்க்கப் படுவர்.

“இழிந்த பிறப்பு” எனின் மானிடப் பிறப்பின்றி மானிட உருவில் உலவும் கொடிய விலங்குகள், நச்சு நோய்களைப் பரப்பும் புழு, பூச்சிகள் பட்டியலில் சேர்த்து எண்ணப்படுவர் என்றும் கூறலாம்.

1. குடிமைப் பண்பு என்பது நாட்டின் பொதுப் பண்புக்கு இசைந்து வாழ்தல். அதாவது நாட்டில் உள்ளோர் அனைவருடனும் ஒத்துப் போகத் தக்க வாழ்க்கையினை மேற்கொள்ளல்.

2. அதாவது இனம், சாதி, சமயப்பிரிவுகள் பாதிக்கப்படாத பொதுமை உணர்வுடன் பலருடனும் இசைந்து வாழ்தல்.

3. மற்றவர்க்குப் பயன்படும் வாழ்க்கை வாழ்தல்.

4. சமூக உறவுகளைக் கெடுக்கும் செய்திகளைப் பேசாதும், செய்யாதும் வாழ்தல்.

‘மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.’

134

கற்றவேதம் மறந்தானாயினும் திரும்பக் கற்றுக் கொள்ளலாம், பார்ப்பான். பார்ப்பான் பிறப்புக்குரிய ஒழுக்கத்தில் கெடுவானாயின் கெட்டுப்போவான்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது வள்ளுவம். ஆதலால் இங்குப் ‘பிறப்பொழுக்கம்’ என்பது இரண்டாவது பிறப்பையேயாம். பார்ப்பனர்க்கு இருபிறப்பு உண்டு. முதற்பிறப்பு எல்லாரும்போல. இரண்டாவது பிறப்பு, முப்புரிநூல் அணிந்து காயத்திரி முதலிய மந்திரங்கள்