பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



181



அரசுக்குத் தேவை என்றால், ‘இறை ஒருங்கு நேர்வது நாடு’ என்றார் வள்ளுவர். அரசுக்கு இன்று ஒரு ஆபத்து ஏற்பட்டுவிட்டது. அந்நியப் படையெடுப்பு வந்திருக்கிறது. இன்ன நாட்டிலிருந்து ஐயாயிரம் அகதிகள் வந்திருக்கிறார்கள். இதற்கு இவ்வளவு ரூபாய் தேவை என்று எவ்வளவு திட்டமிட்டுச் சொல்கிறானோ அந்தத் திட்டமிடுகிற தொகையை ‘இறை ஒருங்கு நேர்வது நாடு’ என்றார்.

அரசு அறிவித்த 24 மணி நேரத்திற்குள்ளாக, அந்த அரசு கேட்கின்ற தொகை முழுவதும் கொடுக்கின்ற நாடு சிறந்த நாடு என்று சொன்னார். அது எப்பொழுது என்றால்,

‘பொறை ஒருங்கு மேல்வருங்கால்’

நாட்டின் மேலே படையெடுப்பு வருகின்ற காலத்திலும், வேறு அல்லல் வருகின்ற காலத்திலும் அரசு திட்டமிட்டு இவ்வளவு தொகை வேண்டும் என்று கேட்கும். கேட்ட 24 மணி நேரத்தில் அது அரசனுடைய கருவூலத்திற்கு வந்து சேரும்.

‘ஒருங்கு நேர்வது நாடு’

இன்று கொஞ்சம், நாளை கொஞ்சங்கூட அல்ல! ஒரு தேதியில் அதைக் கொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் அந்த நாட்டுக் குடிமக்கள். இது இயல்பு என்று வள்ளுவர் சொன்னார். இது இங்கிலாந்து நாட்டுச் சரித்திரத்தைப் பார்க்கையிலே, சர்ச்சிலினுடைய உதாரணம் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது நம் நாட்டிலே அரசுக்குக் கடன் வழங்குவது என்று சொன்னால் அந்த அதிகாரிகள் படுகின்றபாடு, ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஒரு கடன் என்று அரசு ஒரு மின்சாரக் கழகத்திற்கு அறிவித்துவிட்டால்-ஒரு சிறு சேமிப்பு என்று அறிவித்து விட்டால் அதை 24 மணி நேரத்துக்குள்ளாக முறையாகத்