பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆள்தான். ஆனால் முகம் சிரிப்பாய் இருக்கும்; இனிய வார்த்தை இருக்கும். அவன் என்றைக்காவது திட்டமிட்டுச் செய்தானே ஆயின், ஆள் தலையே தப்பாது. அந்த ஆள் மனத்திற்குள்ளே மாசு.

‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்’

278

அந்த இலக்கணம் வருகிறபோது அடிபட்டுப் போய் விடுகிறான்.

தாயம் விளையாடும்போது காய் தப்பித்துக் கொண்டே போகும். இரண்டு மூன்று தடவை தப்பித்துக் கொண்டே வரும். பின்பு இன்னொரு காய் குறுக்கே வந்து அடித்துவிடும். ஆக,

‘முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ாம்
இன்சொ லினதே அறம்’

93

என்ற இலக்கணத்திலே வெற்றி பெற்றுவிட்டான். பிறகு அகத்தாலே அந்த ஒழுக்கம் இல்லாமையினாலே,

‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்’

278

என்ற இடத்திலே அந்தக் காய் அடிபட்டுப் போய்விடுகிறது. பிறகு அறிவுடையவன் என்று வளர்ந்து வருவான். அறிவினால் ஆவது உண்டோ? என்று கேள்வி கேட்கிறபோது, அது அடிபட்டுப் போய்விடுகிறது.

ஆகையினாலே வாழ்க்கையிலே பல்வேறு இயல்புகள் உண்டு.

அந்தப் பரமபதத்திலே காயாடும்போதிலே மேலே போய்ப் பாம்பின் வாய் கடிபட்டவுடன், கீழே காய் வேகமாக வந்துவிடுகிறதே. அதே போல மனிதனுடைய வாழ்க்கை ஒரு செங்குத்துப் பாறைபோல ஏற வேண்டிய ஒன்று. அதிலே