பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



215


ஒரு பீதியை நாம் கொள்ளக் கூடாது. ‘வினை’ என்றாலே செயல் என்றுதான் பொருள். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்று தமிழ் இலக்கியம் பேசும். ஓர் ஆண் மகன் என்று சொன்னால், செயல் செய்வதுதான் அவனுக்கு இயற்கை. செய்வதுதான் அவனது உயிர் இயற்கை. செய்யாமல் இருந்தால்தான் தவறு. எனவே, செயல்கள் செய்யாமல் சோம்பி இருப்பது வாழ்க்கையன்று.

செயல்களின் பயன்களைவிட, செயல்கள் செய்வதற்குரிய நோக்கத்தின் பயன்தான் விளையும். ஆக வினை துன்பமாக மாறுவது, அல்லது வினை இன்பமாக மாறுவது, எந்த நோக்கத்தில், எதற்காக ஏன் செய்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. இப்பொழுது நான் கோயில் ஒன்று கட்டுகிறேன். கோயில் கட்டுகிற செயல் நல்ல செயல். அதிலே புண்ணியம் கிடைக்க வேண்டும்; கிடைக்கலாம். ஆனால் நான் கோயில் கட்டுகிறபொழுது வேறு யாரையாவது ஏமாற்றி முதலடிப்பதற்காகக் கோயில் கட்டினால், பணம் பெட்டியிலே நிறையும்; ஆனால் புண்ணியம் வந்து சேராது. செய்கிற செயல்களைவிட, செய்வதற்குரிய நோக்கம் என்ன? அதனால்தான் பொறுத்தார் ஓர் இடத்தில் பாராட்டப் பெறுகிறார் சேக்கிழாரால். வெகுண்டு தாக்குவார் ஓர் இடத்தில் பாராட்டப் பெறுகிறார். சேக்கிழாரையும் நாம் இன்றைக்குக் கூடவே சேர்ந்து பார்க்கலாம். ஓர் இடத்திலே ஒருவன் மிகப் பெரிய பொறுமைசாலியாக இருக்கிறான். பகைவன் வருகிறான்.

திருவள்ளுவரே,

‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.’

278

என்று சொன்னார்.

‘மனத்தது மாசாக’ மனத்திலே ஏகப்பட்ட குப்பை. நகராட்சிக் குப்பைத் தொட்டிகளைவிட மோசமான