பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியாருக்குப் பிடித்த குறள்!



323


ஐயா அவர்கள் சிரித்துக்கொண்டே பொருள் விளக்கம் கொடுத்தார்கள்.

“நமது தமிழ்க்குடியை வளர்க்க வேண்டும்; நாள், நட்சத்திரம் பார்க்காமல் விரைந்து தொண்டு செய்ய வேண்டும். தமிழ்க் குடியைத் தழைக்கச் செய்யும் தொண்டினை “இன்று” “நாளை” என்று ஒத்திப் போட்டுச் சோம்பல் செய்யக் கூடாது. தமிழர்கள் தமக்குள் மானம், அவமானம் என்ற அடிப்டையில் பழகக் கூடாது. மானம், அவமானத்தைக் கடந்ததுதான் தமிழினத்திற்குச் செய்யக்கூடிய பணி. இந்த உணர்வோடு தொண்டு செய்தால்தான் தமிழ்க்குடி வளரும். இதைத்தான் இந்தக் குறள் நமக்குச் சொல்கிறது” என்றார்.