பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறாததாலும் இந்த அவலநிலை கருக் கொண்டுள்ளது. ஆதலால், திருவள்ளுவர் மக்களிடத்தில் காணப்பெறும் குற்றங்களுக்குக் காரணம் அரசின் குற்றமேயென்றும் அரசினிடம் காணப்பெறும் குற்றம் நீங்கினால், மக்களிடத்துக் குற்றங்கள் காணப்பெறா என்றும் கருதுகின்றார். வள்ளுவர் கருத்துப்படி குற்றம். கண்டிக்கத் தக்கதுதான். ஆனால், ஒரு குற்றம் காரியமாகவும், ஒரு குற்றம் காரணமாகவும் விளங்கும். காரியக் குற்றத்தைவிடக் காரணக் குற்றத்தை வள்ளுவர் கடுமையாகக் கண்டிக்கின்றார். காரணம் மாறினால்தான் காரியமும் செம்மைப்படும் என்பது வள்ளுவர் கருத்து. இதனை,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு’

436

என்று கூறுகின்றார்.

திருவள்ளுவர், குடியாட்சி முறையைத் தழுவிய முடியாட்சியையே காட்டியுள்ளார். அவர் காலத்தில் உலக முழுதும் முடியாட்சியே நடைபெற்றது. அந்தக் காலத்தில் குடியாட்சி தழுவிய முடியாட்சியைச் சிந்தனை செய்து தந்த பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. அதிகாரம் உள்ள அரசைத் தழீஇ நிற்கப் பலர் விரும்புவது இயற்கை. அதுவே நேற்று-இன்று நடைமுறையுமாகும். ஆனால், திருவள்ளுவர் குடிகளைத் தழுவிநிற்கும் அரசை உலகம் தழுவும் என்றும், கூறுகிறார். இத்தகைய ஓர் அரசை இன்று இங்கிலாந்தில் பார்க்கிறோம். இங்கிலாந்து நாட்டு ஆட்சிமுறையில் பாராளுமன்றமும் உண்டு; அரசனும் உண்டு.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு’.

544

நல்ல அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்யும் ஓர் அமைப்பே யாகும். அந்தச் சேவையை இடையூறின்றிச்