பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆகியன பற்றிப் பகை, அறமாகிறது-அல்லது மாறாகிறது. தீயவற்றோடு பகைகொண்டு எதிர்த்துப் போராடுதல் வாழ்வின் நோக்கமாய் அமைதல் வேண்டும்.

வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் சமாதானம் செய்வித்தல் போலச் சிலர் தீமையோடும் சமாதான்ம் செய்து கொள்வர். தீமையையும் செய்துவிட்டுப் பிராயச்சித்தம் - கழுவாய் செய்வர். இது அற நெறியன்று.

அதனால், மனித குல வரலாற்றில் தீமையை எதிர்த்துப் போராடிய போராட்டங்களைவிட ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள அரசர்கள் நடத்திய போராட்டங்களே மிகுதி. மனிதத் தீமையை எதிர்த்துப் போராடியவர்கள் தீர்க்க தரிசிகள்-ஞானிகள். கொடிய ஆதிக்க வெறி பிடித்த, குடிநலம் பேணாத அரசர்களை எதிர்த்துப் போராடியவர்களும் அரசியலில் ஞானிகள் என்றே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்காவில் நீக்ரோ விடுதலைக்காக நடந்த புரட்சியும், சோவியத் புரட்சியும், இந்திய விடுதலைப் புரட்சியும் ஆதிக்கத்தை எதிர்த்து நிகழ்ந்தவை. புத்தரும், ஏசுவும், முகம்மது நபியும், அப்பரடிகளும் நிகழ்த்திய போர் மனித குலத் தீமையை எதிர்த்த போர்! இந்தப் போர்க் களங்கள் வேள்விக் கூடங்களைப் போலப் புனிதமானவை; அவைகளினும் விஞ்சிய புனிதமானவை.

பகை, எளிதில் கொள்ளக் கூடாது. தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். பகைதானே என்று அற்பத்தின்மீது பகை கொள்ளக்கூடாது. நம்முடைய பகைவரும் மாட்சிமை மிக்குடையராக இருத்தல் வேண்டும். நம்முடைய பகைவருக்கு மாட்சிமை இல்லாது போனால் எதிர்ப்போர்க்கும் இழிவு. அதனாலன்றோ கம்பன், ஒப்புமையில்லாத